'இவருக்காக நல்லா ஆடிட்டிருந்த ப்ளேயர உட்காரவச்சாங்க!.. இவர் என்ன கொஞ்சம் கூட நிலைம புரியாம இருக்காரு'!.. சுக்கு நூறாக சிதறிய மும்பையின் ப்ளான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணியின் ஓப்பனிங் வீரர் டி காக் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சொதப்பி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பைக்கும் டெல்லிக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் மும்பை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மும்பை அணியில் இன்று ரோஹித் மற்றும் டி காக் ஒப்பனர்களாக இறங்கினார்கள். கடந்த வருடமும் மும்பை அணிக்காக டி காக் ஓப்பனிங் இறங்கினார். மும்பை அணியின் முக்கியமான வீரராக டி காக் திகழ்ந்தார். பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு டி காக் உறுதுணையாக இருந்தார். இதனால் இந்த வருடமும் டி காக்கிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
மும்பை அணிக்காக முதல் போட்டியில் கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார். மும்பை அணிக்காக அதிரடியாக ஆடி கிறிஸ் லின் அரைசதம் அடித்தார். ஆனால் டி காக் வந்த பின் கிறிஸ் லின் நன்றாக ஆடியும் கூட, அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால், அணியில் வாய்ப்பு கிடைத்த பின் தொடர்ந்து மூன்று போட்டிகளாக டி காக் சொதப்பிக்கொண்டு இருக்கிறார். எந்த போட்டியிலும் 20 ரன்கள் கூட தாண்ட முடியாமல் டி காக் தொடர்ந்து சொதப்பி வருவது மும்பை அணியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
குறிப்பாக சென்னை பிட்சில் இவரால் ஆட முடியவில்லை. சென்னை பிட்சில் ஸ்லோ பால்களை எதிர்கொள்ள முடியாமல் இவர் கடுமையாக திணறுகிறார். இன்று டி காக் 1 ரன்னுக்கு அவுட்டானதும் மும்பை ரசிகர்கள் மனமுடைந்து துவண்டு போயினர். தொடர்ந்து மூன்று போட்டிகளாக சொதப்பி விட்டாரே என்று மும்பை அணியும் கலக்கத்தில் இருக்கிறது. இதனால் அடுத்த போட்டியில் டி காக்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்