‘பில்லா ரங்கா பாட்ஷாதான்!’.. ‘தலைவன் வேற ரகம்!’.. சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்த 'தல' தோனியின் 'தெறிக்கவிடும்' ஃபோட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய ரசிகர்களின் பேராதரவோடு இதுவரை 12 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடரானது இந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கவுள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாது என்பதால் துபாயில் ஐ.பி.எல் தொடரை நடத்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டிருந்தது. அதன்படி ஐபிஎல் போட்டிகளுக்கான கால அட்டவணையும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இதனிடையே சென்னை அணியின் கேப்டனான தோனி பற்றி பலரும் சிலாகித்து பேசி வருகிறார்கள். இந்நிலையில் வெறித்தனமாக தோனி பயிற்சி எடுத்து வரும் வீடியோ ஒன்றை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதன் தொடர்ச்சியாக, தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நாற்காலியில் தோனி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “பில்லா ரங்கா பாட்ஷாதான்!” என கேப்ஷன் பதிவிடப்பட்டுள்ளது.
Billa Ranga Baasha dhaan... 😎💛#WhistlePodu #Yellove pic.twitter.com/9EzH6ZXWQu
— Chennai Super Kings (@ChennaiIPL) September 11, 2020
இதைப் பார்த்த பலரும் “தலைவன் வேற ரகம், தல எப்பவும் கெத்துதான்” என்பன போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்