'இத்தன இக்கட்டிலும் பிளே ஆப் செல்ல'... 'மீதமுள்ள ஒரே நம்பிக்கை'... 'ஆனா, இதுமட்டும் நடந்துடக்கூடாது'... 'கலக்கத்தில் CSK ரசிகர்கள்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்தடுத்த தோல்விகளை தொடர்ந்து சிஎஸ்கே அணி இந்தாண்டு பிளே ஆப் செல்வதே சந்தேகமாகியுள்ளதால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், சார்ஜாவில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட அந்த அணி மோசமாக தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இதுவரை மொத்தமாக விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வெற்றிபெற்றுள்ளது. மீதம் இருக்கும் 6 போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது.
பொதுவாக ஒரு அணி ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் 14 போட்டிகளில் குறைத்து 7-8 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். நல்ல ரன் ரேட் இருந்தால் 7 போட்டிகளில் வென்றால் கூட பிளே ஆப் செல்ல முடியும். இதனால் சிஎஸ்கே மீதம் விளையாட இருக்கும் 5 போட்டிகளில் அனைத்திலுமே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதுவும் 5 போட்டிகளிலுமே நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதால் அந்த அணி பிளே ஆப் செல்வது சந்தேகமாகியுள்ளது.
இதற்கிடையே டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே பிளே ஆப் செல்வது உறுதியாகிவிட்ட சூழலில், பெங்களூர் மூன்றாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதால், நான்காவது இடத்தை பிடிக்க போகும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நான்காவது இடத்தை பிடிப்பதற்காக சிஎஸ்கே, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. இதில் பெரும்பாலும் ஹைதராபாத் அல்லது கொல்கத்தா பிளே ஆப் செல்ல அதிக வாய்ப்புள்ளது எனவே கூறப்படுகிறது.
ஏனெனில் சிஎஸ்கே இனி விளையாட உள்ள 5 போட்டிகளிலும் பெங்களூர், மும்பை போன்ற வலுவான அணிகளை எதிர்கொள்கிறது. இதில் ஒரே ஒரு போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும் கூட பிளே ஆப் வாய்ப்பை இழக்கும். இதுவரை சிஎஸ்கே விளையாடிய 10 ஐபிஎல் சீசன்களில் அனைத்திலுமே பிளே ஆப் சென்றுள்ள நிலையில், இந்த சீசனிலும் மீதமுள்ள போட்டிகள் அனைத்திலுமே வெற்றி பெற்று சிஎஸ்கே பிளே ஆப் சென்றுவிட வேண்டுமென அந்த அணி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மற்ற செய்திகள்