'களத்தில் கோலி முறைக்க'... 'அந்தப்பக்கம் வைரலான ரவி சாஸ்திரியின் ட்வீட்!!!'... 'என்ன தான் நடக்குது இந்திய அணியில்???'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணி வீரர் சூர்ய குமார் யாதவின் அதிரடி ஆட்டத்தை பார்த்து ரவி சாஸ்திரி செய்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகியுள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அவருடைய ஆட்டம் காரணமாக நேற்று பெங்களூரை எளிதாக வீழ்த்தி மும்பை வென்றது. இதன் காரணமாக தற்போது இந்திய அணிக்குள் சூர்ய குமார் யாதவை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. தற்போது மட்டுமில்லாமல் கடந்த 3 வருடமாகவே சூர்ய குமார் யாதவை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடர் தொடங்கி டொமஸ்டிக் கிரிக்கெட் வரை அனைத்திலும் சூர்ய குமார் யாதவ் நன்றாக விளையாடி வரும்போதும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படததால் இந்திய அணியின் கேப்டன் கோலியும், தேர்வுக்குழுவும் அவரை தொடர்ந்து புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. சூர்ய குமார் யாதவ் ரோஹித் சர்மாவிற்கு நெருக்கமானவர் என்பதாலேயே கோலி வேண்டுமென்றே அவரைப் புறக்கணிக்கிறார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
அதற்கேற்ப இந்த முறை ஆஸ்திரேலிய தொடரிலும் சூர்ய குமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெங்களூர் அணியில் இருக்கும் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சூர்ய குமார் யாதவிற்கு கோலி வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் நேற்று மைதானத்திலும் யாதவிற்கும் கோலிக்கும் இடையே பல முறை உரசல்கள் ஏற்பட்டது. கோலி இவரை முறைப்பதும், சூர்யா குமார் பதிலுக்கு கோலியை முறைப்பதும் மைதானத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேற்று சூர்ய குமார் யாதவின் ஆட்டத்தை பார்த்துவிட்டு செய்த ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டில் அவர், சூர்ய வணக்கம். வலிமையாக இருக்கவும். பொறுமையாக இருக்கவும் என சூர்ய குமார் யாதவின் புகைப்பத்துடன் அவரை டேக் செய்து கூறியுள்ளார். அதாவது இந்திய அணியில் சேரும் வரை பொறுமையாக இருக்கவும் என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சூர்ய குமார் யாதவை இந்திய அணியில் சேர்க்க கோலி விரும்பவில்லை எனக் கூறப்படும் நிலையில் ரவி சாஸ்திரி முதல் முறையாக இப்படி கோலியின் முடிவிற்கு எதிராக பேசியுள்ளதாக பாராட்டி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம் இதை கோலியிடம் சொல்லுங்கள் என விமர்சனம் செய்தும், கோலி நேற்று மைதானத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து கூறியும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் தற்போது இந்திய அணியின் தேர்வில் என்ன தான் நடக்கிறது என்ற குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
Surya namaskar 🙏🏻. Stay strong and patient @surya_14kumar #MIvsRCB pic.twitter.com/oJEJhekwpC
— Ravi Shastri (@RaviShastriOfc) October 28, 2020
மற்ற செய்திகள்