'ஒரே தவற எவ்ளோ முறை செய்வீங்க ஸ்ரேயாஸ்?.. இப்படியா சொதப்புறது?'.. தோல்விக்கு 'இது' தான் காரணம்!.. டெல்லி அணி கோப்பையை கோட்டை விட்டது எப்படி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிடல்ஸ் அணி 2020 ஐபிஎல் இறுதிப் போட்டியில் எந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சரணடைந்தது.
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் லீக் போட்டிகளில் செய்த அதே தவறை மீண்டும் இறுதிப் போட்டியில் செய்தார். அதுதான் டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
2020 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அரைசதம் அடித்து அணியை மீட்டனர்.
டெல்லி அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. துபாயில் நடந்த கடந்த சில போட்டிகளை வைத்து பார்க்கும் போதும், மும்பை அணியின் பேட்டிங் வரிசையை வைத்து பார்க்கும் போதும் இது குறைவான ஸ்கோராக கருதப்பட்டது.
டெல்லி அணி இந்த ஸ்கோரை எப்படி தற்காத்து வெற்றி பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. டெல்லி அணி அஸ்வின், அக்சர் பட்டேல், பிரவீன் துபே என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே அதிகம் நம்பியது.
அஸ்வின் முதல் ஓவரை வீசினார். அப்போதே மும்பை அணி அடித்து ஆடத் துவங்கியது. அடுத்து ரபாடா - அன்ரிச் நோர்ஜே பந்து வீசி அதிக ரன்கள் கொடுத்தனர். அதன் பின் தொடர்ந்து சுழற் பந்துவீச்சாளர்களை பந்து வீசச் செய்தார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால், அந்த திட்டம் வேலை செய்யவில்லை.
ரபாடா 2 ஓவர்களும், அன்ரிச் நோர்ஜே ஒரு ஓவரும் மட்டுமே வீசிய நிலையில் அவர்களுக்கு மீண்டும் 17வது ஓவரில் தான் வாய்ப்பளித்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அவர்கள் பந்து வீச வந்த உடன் விக்கெட்களும் வீழ்ந்தன. ஆனால், அதனால் பயனில்லாமல் போனது.
மும்பை அணி வெற்றியை நெருங்கி இருந்தது. 24 பந்துகளில் 20 ரன்கள் தேவை எனும் நிலையில் ஆடி வந்தது. அப்போது நோர்ஜே ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தினார், ரபாடா பொல்லார்டு விக்கெட்டை வீழ்த்தினார்.
ரபாடா, நோர்ஜேவுக்கு முன்பே பந்து வீச வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர்கள் விக்கெட் வீழ்த்தி இருக்கக் கூடும். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி அழுத்தத்தில் தவறுகள் செய்து தோல்வி அடையும் நிலையை எட்டி இருக்கக் கூடும். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய பந்துவீச்சாளர்களை நம்பாமல் தவறு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் ஆடிய கடைசி மூன்று ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்களை இழந்த போதும் குறைவான ரன்களே வெற்றிக்கு தேவைப்பட்டதால் நிதானமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்ற செய்திகள்