ஆட்டத்தை தலைகீழாக மாத்திய ‘ஒத்த’ ரன்.. ‘இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தது இதுக்குதானா..!’ கொதித்த ப்ரீத்தி ஜிந்தா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இவ்வளவு விதிமுறைகளை பின்பற்றி போட்டியை பார்க்க வந்ததன் பலன் இதுதானா என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விரக்தியை பதிவிட்டுள்ளார்.

ஆட்டத்தை தலைகீழாக மாத்திய ‘ஒத்த’ ரன்.. ‘இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தது இதுக்குதானா..!’ கொதித்த ப்ரீத்தி ஜிந்தா..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. அதற்கு காரணம் அம்பயரின் தவறு முடிவு காரணம் என கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தெரிவித்தனர். இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. அப்போது ரபாடா வீசிய 19-வது ஓவரை எதிர்கொண்ட பஞ்சாப் வீரர் ஜோர்டான், பந்தை லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு 2 ரன்கள் எடுத்தார்.

ஆனால் ரன் எடுக்கும்போது ஜோர்டான் சரியாக கிரீஸுக்குள் வைக்கவில்லை என கருதி அம்பயர் நிதின் மேனன் ஒரு ரன்னை குறைத்துவிட்டார். இந்த ஒரு ரன் பஞ்சாப் அணிக்கு கிடைத்திருந்தால் 20 ஓவர்களுக்கு உள்ளேயே வெற்றி பெற்றிருக்கும். இந்த ஒரு ரன் தான் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது. இதனால் சூப்பர் ஓவர் சென்று பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. அம்பயர் கொடுத்த இந்த முடிவை முன்னாள் வீரர் சேவாக் உள்ளிட்ட வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘இந்த கொரோனா தொற்று காலத்தில் உற்சாகமாக பயணித்து இங்கு வந்தேன். 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டேன், 5 முறை கொரோனா டெஸ்ட் ஆகியவற்றை புன்கையுடன் எதிர்கொண்டேன். ஆனால் இந்த ஒரு ரன் விவகாரம் என்னை மிகவும் ஏமாற்றமடைய செய்துவிட்டது. தொழில்நுட்பம் இருந்து என்ன பயன். பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. அப்போது தான் இதுபோல் ஒவ்வொரு வருடமும் நடைபெறாது’ என தனது ப்ரீத்தி ஜிந்தா தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில், சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அம்பயர் தவறுதலாக விக்கெட் கொடுத்துவிட்டார். உடனே தோனி ரிவ்யூ கேட்டார். அதில் நாட் அவுட் என்பது தெரியவந்தது. இதனால் அப்போது அம்பயரை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.IPL KXIP Preity Zinta on controversial short-run call

மற்ற செய்திகள்