'வாழ்க்கைல அதிர்ஷ்டம் ஒரு முறை தான் காலிங் பெல் அடிக்கும்'!.. 'இந்திய அணி வாய்ப்பை இழக்கிறாரா பிரசித் கிருஷ்ணா'?.. உட்ராதீங்க ப்ரோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியை சேர்ந்த பவுலர் பிரசித் கிருஷ்ணாவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு அரிய வாய்ப்பு கைநழுவிக் கொண்டிருக்கிறது.

'வாழ்க்கைல அதிர்ஷ்டம் ஒரு முறை தான் காலிங் பெல் அடிக்கும்'!.. 'இந்திய அணி வாய்ப்பை இழக்கிறாரா பிரசித் கிருஷ்ணா'?.. உட்ராதீங்க ப்ரோ!!

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2021 ஐபிஎல் தொடரின் இடையே கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் தொடங்கிய கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து வேகமாக பரவியது.

இதன் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இன்னும் 31 போட்டிகள் மீதம் உள்ளது. ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் குவாரண்டைன் இருக்காமலேயே அணியின் பபுளுக்கு நுழைந்தார். இதனால் அந்த அணியில், முதலில் வருண் சக்கரவர்த்திக்கும், பின்னர் சந்தீப் வாரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், அந்த அணியில் தற்போது 4வது வீரராக பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் 7 போட்டிகளில் ஆடிய அவர் 8 விக்கெட்களை எடுத்தார். முன்னதாக இன்று காலை இந்த அணியை சேர்ந்த நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃப்ரெட்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும், 2 முறை எடுக்கப்பட்ட சோதனையில் பாசிட்டீவ் என முடிவு வந்துள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக இந்திய அணியில் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணாவுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில்தான் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் மே 25ம் தேதி இந்திய வீரர்கள் அனைவரும் பிசிசிஐ-ன் பபுளுக்கு செல்கின்றனர். எனவே, அன்றைக்கு பிரசித் கிருஷ்ணாவும் பூரண குணமடைந்து முழு உடற்தகுதி அடைய வேண்டும். இல்லையெனில் தனது முதல் சர்வதேச போட்டிகான வாய்ப்பை இழப்பார். 

கொல்கத்தா அணியில் வீரர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த சூழலில் இதுவரை அடுத்தடுத்து 4 வீரர்களுக்கு அந்த அணியில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

 

மற்ற செய்திகள்