'உங்க டீம் ஏன் இன்னும் வெளங்காம இருக்குனு இப்போ புரியுதா'?.. கொல்கத்தா அணியின் பலவீனத்தை... வெளிச்சம் போட்டு காட்டிய கவாஸ்கர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சொதப்பிவரும் கொல்கத்தா அணி மீண்டு வருவதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் முக்கிய யோசனையை முன்வைத்துள்ளார்.

'உங்க டீம் ஏன் இன்னும் வெளங்காம இருக்குனு இப்போ புரியுதா'?.. கொல்கத்தா அணியின் பலவீனத்தை... வெளிச்சம் போட்டு காட்டிய கவாஸ்கர்!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசன்களில் சொதப்பியதுபோல், 14ஆவது சீசனிலும் படுமோசமாகச் சொதப்பி வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது. மீண்டும் தொடர் தோல்விகளைச் சந்திக்கும்பட்சத்தில் இந்த வருடமும் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படலாம்.

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் படுமோசமாகச் சொதப்பினர். இறுதியில் ஆண்ட்ரே ரஸல் தனியொருவனாகப் போராடி அணிக்கு ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை (154) பெற்றுக்கொடுத்தார்.

கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக் போன்ற பல திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணி ரன்களை குவிக்க திணறி வருகிறது. இவர்கள் எதற்காகச் சொதப்புகிறார்கள் என்ற காரணம் குறித்துப் பேசியுள்ள இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதற்கான தீர்வையும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது, "அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே கொல்கத்தா அணி வெற்றிபெற முடியும் எனத் தெரிவித்துள்ளார். அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கிறார்கள். முதல் வரிசையில் ஷுப்மன் கில், இயான் மோர்கன் ஆகிய கிளாசிக் பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருக்கிறார்கள். அடுத்து 5-6 இடங்களில் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் உள்ளனர். மூன்றாவது இடத்தில் ராகுல் திரிபாதி ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடி வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய கவாஸ்கர், "நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் சுனில் நரைன் ஏன் களமிறக்கப்படுகிறார் எனத் தெரியவில்லை. அவர் அவ்வளவு பெரிய பேட்ஸ்மேனா? இல்லை கொல்கத்தா அணியில் வேறு பேட்ஸ்மேன்கள் இல்லையா? அவருடைய வீக்னெஸை அனைத்து அணிகளும் கண்டுபிடித்துவிட்டன. இனிமேலும் அவரால் அதிரடியாக விளையாட முடியாது. இதனால், அவரை நீக்கியாக வேண்டும்.

ஒருவீரர் தொடர்ந்து சொதப்புவதால், அவருக்கு முன், பின் களமிறக்கக் கூடிய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் அழுத்தம் உண்டாகும். இதனைக் கொல்கத்தா அணி கவனத்தில்கொண்டு, சுனில் நரைனுக்குப் பதிலாக மாற்று வீரரைக் களமிறக்கினால் மட்டுமே அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றிபெற முடியும்" என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அடுத்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

 

மற்ற செய்திகள்