Karnan usa

'அவர பார்த்து மிரண்டுட்டேன்!.. இப்போ என் கண்ணுக்கு வேற மாதிரி தெரியுராரு'!.. தினேஷ் கார்த்திக்-ஐ மிரளவைத்த சீனியர் வீரர்!.. KKR-ன் சூப்பர் ஹீரோ!?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கொல்கத்தா அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருப்பார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

'அவர பார்த்து மிரண்டுட்டேன்!.. இப்போ என் கண்ணுக்கு வேற மாதிரி தெரியுராரு'!.. தினேஷ் கார்த்திக்-ஐ மிரளவைத்த சீனியர் வீரர்!.. KKR-ன் சூப்பர் ஹீரோ!?

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அதே போல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும், ஆவலையும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

ipl kkr dinesh karthik reveal harbhajan singh training nets

அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் டி.20 தொடர் குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்தி, இந்த வருட ஐபிஎல் டி20 தொடரில் கொல்கத்தா அணிக்கு ஹர்பஜன் சிங் கூடுதல் பலம் கொடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், ஹர்பஜன் சிங் வலைபயிற்சிகள் மிக ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஹர்பஜன் சிங் பயிற்சியில் காட்டும் ஆர்வம் எங்களுக்கே புத்துணர்ச்சியை கொடுத்து வருகிறது. பயிற்சிக்கு மற்ற வீரர்களை விட ஹர்பஜன் சிங்கே முதல் ஆளாக வருவார். ஒருநாள் மட்டும் இல்லை, ஒவ்வொரு நாளும் அவரே பயிற்சிக்கு முதல் ஆளாக வருகிறார்.

கடந்த ஒரு வார காலமாக ஹர்பஜன் சிங் எனக்கு வேறு மாதிரியாக தெரிகிறார். பயிற்சி போட்டிகள் 7 மணிக்கு துவங்குவதாக இருந்தால் ஹர்பஜன் சிங் 4 மணிக்கே களத்திற்கு வந்துவிடுவார். முன்னதாக களத்திற்கு வரும் ஹர்பஜன் சிங் ஷாகில் அல் ஹசன், இயன் மோர்கன் போன்று பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசிவிட்டு தான் பயிற்சி போட்டியிலேயே விளையாடுவார்.

வெறும் பந்துவீசுவதோடு அல்லாமல் போட்டி முடியும் வரை களத்தில் இருந்து பீல்டிங் செய்வார். ஹர்பஜன் சிங் எவ்வளவு சிறந்த வீரர் என்பது அவரது கிரிக்கெட் வரலாற்றை எடுத்து பார்த்தால் தெரியும், கொல்கத்தா அணியின் மிக முக்கிய வீரராக ஹர்பஜன் சிங் இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்