'யாரு பெருசுனு அடிச்சு காட்டு'!.. சிஎஸ்கே - ஆர்சிபி ரசிகர்கள் இடையே டிஜிட்டல் போர்!.. கதிகலங்கும் இணையம்!.. கூட்றா பஞ்சாயத்த!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதும் ஆட்டத்திற்கு தற்போது இருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

'யாரு பெருசுனு அடிச்சு காட்டு'!.. சிஎஸ்கே - ஆர்சிபி ரசிகர்கள் இடையே டிஜிட்டல் போர்!.. கதிகலங்கும் இணையம்!.. கூட்றா பஞ்சாயத்த!!

ஐபிஎல் தொடரில் வரும் 25ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. புள்ளிப்பட்டியலில் தற்போது, முதல் 2 இடங்களுக்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மாறி மாறி போட்டிப்போட்டு வருகின்றன. இதற்கு ஒரு தீர்வாக இந்த போட்டி அமையவுள்ளது.   

ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, இந்த முறை அசுர பலத்துடன் விளையாடி வருகிறது. இதுவரை அந்த அணி 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், எந்த அணியாலும் ஆர்சிபியை வீழ்த்த முடியவில்லை.

குறிப்பாக, நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 171 என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி அடைந்து மிரளவைத்தது. இதனால் ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வென்றே தீரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தாண்டு முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், அதற்கு அடுத்து நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஃபார்முக்கு வந்துள்ளது. இதைப் பார்க்கும் போது, மீண்டும் பழைய சென்னை சூப்பர் கிங்ஸ் கண்முன்னே தெரிவதாக ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். அந்த அணியில் ஒரே ஒரு பிரச்னையாக இருந்த தொடக்க வீரர் கெயிக்வாட்டும் தற்போது அதிரடி காட்ட தொடங்கிவிட்டதால் ஃபுல் ஃபார்மில் உள்ளது. 

இந்த இரு அணிகளும் மோதும் லீக் போட்டி வரும் 25ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. எனவே, கம்பேக் கொடுத்துள்ள இந்த இரு அணிகளின் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். அதற்காக சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சீசனில் ட்ரெண்டான பெங்களூரு ரசிகைகளின் பாடல் வீடியோ போன்று இந்த முறையும் சண்டையிட்டு வருகின்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சென்னை அணி 17 முறையும், பெங்களூரு அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் போட்டி, பேட்டிங்கிற்கு நன்கு உதவக்கூடிய மும்பை மைதானத்தில் நடைபெறுவதால், இந்த போட்டியில் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது.

 

மற்ற செய்திகள்