"எது ரெய்னா ஐபிஎல் ஆட போறாரா?.." ட்விட்டரில் ரவுண்டு கட்டிய 'ரசிகர்கள்'.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம், கடந்த பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து நடைபெற்றிருந்தது.
இரண்டு நாட்களும் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவராஸ்யமாகவும் ஏலம் நடைபெற்று முடிந்தது. குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது.
கடும் அதிர்ச்சி
மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, பிசிசிஐ வெகு சில நாட்களில் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐபிஎல் மெகா ஏலத்தில், நட்சத்திர வீரர் ஒருவர் தேர்வாகாமல் போனது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
'Mr. IPL' ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, சுமார் 10 ஐபிஎல் தொடர்களுக்கு மேல் ஆடியுள்ளவர் சுரேஷ் ரெய்னா. இந்தாண்டு நடைபெற்றிருந்த ஏலத்தில், இவரை எந்த அணிகளும் எடுக்கவில்லை. சென்னை அணி கூட அவரை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. 'Mr. IPL' என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்தார். தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில், பெரிய அளவில் அவர் ரன்கள் குவிக்கவில்லை.
திடீர் டிரெண்ட்
இருந்தாலும் ஒரே சீசனின் முடிவை வைத்து, ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரரை சென்னை உள்ளிட்ட எந்த ஐபிஎல் அணிகளும் எடுக்க முயலாதது பற்றி, ரசிகர்கள் வேதனையுடன் கருத்து பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் ரெய்னா ஐபிஎல் தொடரில் ஆடுவது குறித்து, ரசிகர்கள் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
ஜேசன் ராய்
புதிய அணிகளில் ஒன்றான குஜாரத் டைட்டன்ஸ் என்ற அணிக்கு, ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கவுள்ளார். ஐபிஎல் ஏலத்தில், ஜேசன் ராயை 2 கோடி ரூபாய்க்கு, குஜராத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் வேளையில், ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என அறிவிததிருந்தார். தொடக்க வீரருக்காக குஜராத் அணி, ஜேசன் ராயை எடுத்திருந்த நிலையில், அவர் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளது, அந்த அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வெயிட்டிங்கில் ரசிகர்கள்
இதனால் தான், ஜேசன் ராய்க்கு பதிலாக, 'Unsold' என அறிவிக்கப்பட்ட வீரரான சுரேஷ் ரெய்னாவை அணியில் எடுங்கள் என ட்விட்டர் முழுவதும் ரசிகரகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய், குஜராத் டைட்டன்ஸ் ஜெர்சியுடன் ரெய்னா இருக்கும் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் வேகமாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
வெளியான தகவல்
இன்னொரு பக்கம், ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக ரெய்னாவை அணியில் எடுக்க குஜராத் அணி திட்டம் போடுவதாகவும் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ள்து. சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த போது, புதிய அணியான குஜராத் லயன்ஸை சுரேஷ் ரெய்னா தலைமை தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்