'என் வழி... தனி வழி'!.. மும்பை அணியின் டாப் பேட்ஸ்மேன்களை... கொத்தாக தூக்கியது எப்படி?.. அமித் மிஸ்ராவின் பிரத்யேக ஸ்கெட்ச்!.. அதிரவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா சிறப்பாக செயல்பட்டு 4 முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் கீரன் பொல்லார்ட் என அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளும் மும்பையின் முக்கிய விக்கெட்டுகள்.
இதையடுத்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து திக்கித் திணறி மும்பை வீரர்கள் 137 ரன்களை மட்டுமே அடிக்கனர். மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து சென்னை பிட்ச்சில் தனது 4வது போட்டியை விளையாடி வருகிறது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் போட்டியை இன்றுதான் துவங்கியுள்ளது.
எனினும், அதன் வீரர்கள் சென்னை பிட்ச்சிற்கு ஏற்றவகையில் தங்களை தயார்படுத்திக் கொண்டு சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மிஸ்ரா 4 விக்கெட்டுகளை தனது 4 ஓவர்களில் அடுத்துடுத்து வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் இந்த ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார்.
தான் எப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்துவது குறித்தே சிந்தித்து வருவதாகவும் சரியான இடங்களில் பௌலிங் செய்ய முயற்சிப்பதாகவும் மிஸ்ரா கூறியள்ளார். எப்போது டி20 போட்டிகளில் பௌலிங் செய்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தன்னுடைய பௌலிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ளாமல் தன்னுடைய வலிமையை பயன்படுத்தி பந்துவீச முயற்சிப்பதாகவும் மிஸ்ரா கூறியுள்ளார். அணியில் சிறப்பான பேட்டிங் அட்டாக் உள்ள நிலையில், தன்னுடைய வேலை முடிந்து விட்டதாகவும் தற்போது பாண்டிங்கின் வேலை துவங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மற்ற செய்திகள்