"ச்சும்மா தெறிக்கவிட்டாரு... ஆனா, அவருக்கு இப்படி ஆகிடுச்சே"... 'மீதி போட்டிகள்'ல விளையாடுவாரா?... 'உணர்ச்சிவசப்பட்ட கேப்டன்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு கையில் ஏற்பட்ட காயம் குறித்து முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

"ச்சும்மா தெறிக்கவிட்டாரு... ஆனா, அவருக்கு இப்படி ஆகிடுச்சே"... 'மீதி போட்டிகள்'ல விளையாடுவாரா?... 'உணர்ச்சிவசப்பட்ட கேப்டன்!'...

நேற்று டெல்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் பல நாட்களுக்கு பின் விளையாடிய சுவடே இன்றி சிறப்பாக ஆடத் தொடங்கிய அஸ்வின், ஒரே ஓவரில் பல வேரியேஷன்களை காட்டினார். மேலும் அந்த ஓவரிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். பஞ்சாபின் முக்கியமான வீரர்களான கருண் நாயர், நிக்கோலஸ் பூரான் ஆகியோரை ஆட்டமிழக்க செய்தார். அப்போது 6வது ஓவரின் கடைசியில் அஸ்வின் பந்து வீசிவிட்டு மிட் ஆன் நோக்கி சென்று பந்தை பிடிக்க சென்றார். IPL DC Ashwin Available For Next Game Physio To Take Final Call

மிட் ஆன் நோக்கி சென்ற பந்தை தாவி பிடிக்க சென்றபோது, தவறான டைவ் காரணமாக இவர் தோள்பட்டை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. கையில் லேசான காயம் ஏற்பட, இவருடைய தோள்பட்டை விலகியுள்ளது. இதையடுத்து இவரை உடனே டெல்லி அணியின் பிசியோ பேட்ரிக் பார்ஹார்ட் சோதனை செய்துள்ளார். இவருக்கு ஏற்பட்ட காயம் ''Freak Shoulder Injury' எனக் கூறப்பட்ட நிலையில், இதனால் இவர் இன்னும் சில போட்டிகளில் விளையாட முடியாது எனக் கூறப்பட்டது.

IPL DC Ashwin Available For Next Game Physio To Take Final Call

ஆனால் தற்போது இதுகுறித்து வருத்தத்துடன் பேசியுள்ள டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், "நான் எப்படியும் மீண்டு வந்துவிடுவேன், அடுத்த போட்டியில் விளையாடுவேன் என அஸ்வின் கூறியுள்ளார். அதனால் அவர் அடுத்த போட்டியிலேயே விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் அஸ்வின் விளையாடுவது குறித்து பிசியோ பேட்ரிக் பார்ஹார்ட்தான் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். அமீரகத்தில் உள்ள ஸ்பின் பிட்ச் காரணமாக இந்த வருடம் பெஸ்ட் ஐபிஎல் பவுலராக அஸ்வின் உருவெடுக்க வாய்ப்புள்ளது எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த காயம் ஏற்பட்டுள்ளது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

மற்ற செய்திகள்