ராஜஸ்தான் ராயல்ஸ் vs சிஎஸ்கே!.. மேட்ச் தொடங்கும் முன்பே அடுத்த சோதனையா?.. பிசிசிஐ முடிவால்... நொறுங்கிப் போன ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த சீசனில் ப்ளே-ஆப்பிற்கு முன்னேறாமல் சிஎஸ்கே அணி வெளிவந்தது. ஆனால் முதலில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பே அந்த அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் vs சிஎஸ்கே!.. மேட்ச் தொடங்கும் முன்பே அடுத்த சோதனையா?.. பிசிசிஐ முடிவால்... நொறுங்கிப் போன ரசிகர்கள்!

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் கொரோனா தாக்கத்தில் சிஎஸ்கே அணி சிக்கியுள்ளது. அந்த அணியின் பௌலிங் கோச் பாலாஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மட்டுமின்றி சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையிலான போட்டி கேகேஆர் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தள்ளி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய போட்டியில் எஸ்ஆர்எச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதவுள்ள நிலையில் நாளைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கேவின் பௌலிங் கோச் பாலாஜிக்கு கொரோனா பாதித்துள்ளதையடுத்து இந்த சிக்கல் நிலவுகிறது. 

பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சிஎஸ்கே அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான நாளைய போட்டியும் ஒத்திவைக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

ஆனால், டெல்லியில் நடைபெறவுள்ள இன்றைய எஸ்ஆர்எச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்றும், பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஎஸ்கேவின் பயிற்சி முகாமும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

கடந்த போட்டியில் டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதியது. நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவிருந்த நிலையில், தற்போது கோச்சுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பையடுத்து அணி வீரர்களுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மற்ற செய்திகள்