Karnan usa

VIDEO: Behindwoods பேட்டியில் சொன்னதை... இன்றைய மேட்ச்சில் அதிரடியாக நடத்திக் காட்டிய ரெய்னா!.. 'சின்ன தல' நீங்க வேற லெவல்!! - EXCLUSIVE

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா Behindwoods-க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் சொன்னதை இன்றைய போட்டியில் செய்தும் காட்டியுள்ளார்.

VIDEO: Behindwoods பேட்டியில் சொன்னதை... இன்றைய மேட்ச்சில் அதிரடியாக நடத்திக் காட்டிய ரெய்னா!.. 'சின்ன தல' நீங்க வேற லெவல்!! - EXCLUSIVE

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரெய்னா மிகவும் அதிரடியாக ஆடி, கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு மிகப்பெரிய come back-ஐ கொடுத்துள்ளார்.

டெல்லி சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே அணி திணறியது. ஆனால் அதன்பின் களமிறங்கிய மொயின் அலி, ரெய்னா இருவரும் அதிரடியாக ஆடி சென்னையை சரிவில் இருந்து மீட்டனர்.

முக்கியமாக மிடில் ஓவர்களில் சிஎஸ்கே அணி ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்னுக்கு குறையாமல் அடித்து அதிரடி காட்டியது. கிட்டத்தட்ட 700 நாட்களுக்கு பின் ரெய்னா இன்றுதான் களமிறங்கினார். கடந்த வருடம் குடும்ப காரணங்களுக்காக ரெய்னா ஆடவில்லை.

அதுமட்டுமின்றி, சர்வதேச போட்டிகளில் இருந்தும் ரெய்னா ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அவர் பார்மில் இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. 

இதற்கிடையே, 'ரெய்னாவின் கதை முடிந்துவிட்டது, இனி அவர் பார்மிற்கு திரும்பவே மாட்டார்' என்று பலரும் விமர்சித்தனர். ரெய்னாவும் கடந்த மாதங்களில் பெரிதாக பயிற்சி எடுக்கவில்லை. 

அதேபோல் சையது முஷ்டாக் கோப்பை போட்டியிலும் ரெய்னா பெரிதாக ஆடவில்லை. இதனால் இன்று ரெய்னா சொதப்புவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவோ வேறு பிளானில் களத்திற்கு வந்தார்.

முதல் 10 பந்துகள் கொஞ்சம் பொறுமையாக ரெய்னா ஆடினார். அதன்பின் ஸ்பின் பவுலர்களை குறி வைத்து ரெய்னா தாக்கினார். அஸ்வின், அமித் மிஸ்ரா போன்ற பவுலர்களை குறி வைத்து ரெய்னா தாக்கினார். முதல் 10 பந்துக்கு பின் அடித்து வெளுக்க தொடங்கிய ரெய்னா மாறி சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார். கிட்டதட்ட 2 வருடங்களுக்கு பின் களத்திற்கு வருவதால் அந்த வெறியோடு ஆடினார். தேவையான பந்துகளை குறி வைத்து சிக்ஸர் அடித்தார்.

வெறும் 32 பந்துகளில், அதிரடியாக ரெய்னா அரை சதம் அடித்து சிஎஸ்கேவில் பெரிய கம்பேக் கொடுத்தார். அதன்பின்பும் அதிரடியாக ஆடும் திட்டத்திலேயே இருந்தார். ஆனால், 54 ரன்களில் ரன் அவுட் ஆனார். 36 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்ஸ் அடித்து ரெய்னா இன்று கலக்கினார்.

இதற்கிடையே, Behindwoods-க்கு பிரத்யேக பேட்டி அளித்த ரெய்னா, 'இந்த ஐபிஎல் சீசனில் நிச்சயமாக நாங்கள் (சிஎஸ்கே) கடுமையாக உழைக்க உள்ளோம். எதிர் அணிகளுக்கு சவாலாக விளையாடுவோம். சிஎஸ்கே ரசிகர்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டுவருவோம்' என்று கூறினார். அதை இன்றைய போட்டியில் அவர் நிரூபித்துள்ளார்.

இதன் மூலம், தன்னுடைய come back-ஐ ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ரெய்னா அறிவித்துள்ளார்.

வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்