VIDEO: ஸ்டெம்ப் தெறிச்சிருச்சு!.. சிக்ஸ் அடிக்கலாம்னு... வெறித்தனமாக வெயிட் பண்ணிட்டு இருந்த ரசல்!.. பெவிலியனுக்கு அனுப்பி வைத்த சாம் கரன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனது ருத்ரதாண்டவ ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மரண பயத்தை கட்டிய ஆண்ட்ரூ ரசலை, சாம் கர்ரான் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் வெளியேற்றிய சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காத டு பிளசிஸ் 95 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 64 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக அந்த அணியின் முதல் ஐந்து வீரர்களும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறியதால் 31 ரன்களுக்கே கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பின்னர் களத்திற்கு வந்த ஆண்ட்ரூ ரசல் கொஞ்சம் கூட பொறுமை காட்டாமல் அசுரத்தனமாக அடிக்க துவங்கினார். சென்னை அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிக்ஸர்கள் பறக்கவிட்டு வான வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார் ஆண்ட்ரு ரசல்.
அப்போது 12வது ஓவரை சாம் கரன் வீச வந்தார். அந்த ஓவரின் 2வது பந்தை சிக்ஸ் அடிக்கவோ என்னவோ, ஸ்டெம்ப் முழுவதையும் மறைத்துக் கொண்டு ரசல் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார். அதனை ஓடிவரும் போதே சரியாக கணித்த சாம் கரன், பந்தை இன்ஸ்விங்காக (inswing) மாற்றி வீசினார். பந்து வந்த திசையை பார்த்து வைட் போகும் என்று நினைத்து ரசல் அதை அடிக்காமல் விட்டுவிடவே, அந்த பந்து சாம் கரனின் கட்டளைக்கு இணங்க பக்காவான இன்ஸ்விங்காக மாறி ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது.
Russell Show is Over
Sam Curran's Magic Delivery 🔥#CSKvKKR #samcurran pic.twitter.com/dpI9wITdPp
— Ashok_muwal 🇮🇳 (@ashok_muwal_) April 21, 2021
மற்ற செய்திகள்