விடிய விடிய ரசிகர்கள் பஞ்சாயத்து!.. காலையில் கூலாக வந்து தீர்ப்பு சொன்ன ஃபிளமிங்!.. சிஎஸ்கேவில் நீடிக்கும் குழப்பம்!.. என்ன தான் தீர்வு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியில் நீண்ட நாட்களாக நிலவும் சிக்கல் குறித்து அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

விடிய விடிய ரசிகர்கள் பஞ்சாயத்து!.. காலையில் கூலாக வந்து தீர்ப்பு சொன்ன ஃபிளமிங்!.. சிஎஸ்கேவில் நீடிக்கும் குழப்பம்!.. என்ன தான் தீர்வு?

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக இளம் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் ஆட்டம் மோசமாக இருந்தது. கடந்த சீசனில் கடைசி மூன்று போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் ஓப்பனிங் இறங்கினார். அந்த மூன்று போட்டியிலும் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றது. இந்த மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்து ருத்துராஜ் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தார்.

ஆனால், இந்த சீசனில் ருத்துராஜ் சரியாக ஆடவில்லை. முதல் போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ருத்துராஜ் அவுட் ஆனார். இதையடுத்து நேற்று போட்டியிலும் ருத்துராஜ் 16 பந்துக்கு 5 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். 

ருத்துராஜ் சரியான பார்மில் இல்லை. அவரிடம் நிறைய தவறான ஷார்ட்கள் இருக்கின்றன. இன் ஸ்விங் (in swing) ஆகும் பந்துகளை ருத்துராஜ் சரியாக அடிக்க முடியவில்லை. இதுதான் அவர் இரண்டு போட்டியிலும் சீக்கிரமே அவுட் ஆக முக்கியமான காரணமாக இருந்தது. 

இந்த நிலையில், ருத்துராஜை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். இவருக்கு இனியும் வாய்ப்பு கொடுக்க கூடாது. அவருக்கு பதிலாக உத்தப்பாவை கொண்டு வர வேண்டும் என்று நேற்று இரவு முழுக்க சிஎஸ்கே ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். 

இரவு முழுக்க ருத்துராஜூக்கு எதிராக பலர் கோரிக்கை வைத்த நிலையில், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் இன்று காலை இந்த கோரிக்கைகள் அனைத்திற்கும் எதிராக பேசி உள்ளார்.

அதில், "ருத்துராஜ் கடந்த வருடம் நன்றாக ஆடினார். அவர் நல்ல வீரர். நேற்று போட்டியில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இதனால் ருத்துராஜ் சரியாக ஆட முடியவில்லை. ருத்துராஜ் மீது நாங்கள் கடந்த வருடம் நம்பிக்கை வைத்தோம். இந்த வருடமும் நம்பிக்கை வைப்போம். அவருக்கு ஆதரவாக இருப்போம். 

அவரை அணியில் எடுத்ததே அவரை ஆதரிக்கத்தான். கண்டிப்பாக எங்களின் சப்போர்ட் தொடரும்" என்று பிளமிங் பேசி உள்ளார்.

இதனால் ருத்துராஜ் நீக்கப்படாமல் தொடர்ந்து அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

 

மற்ற செய்திகள்