போச்சு!.. இனி அவ்ளோதான்!.. மனசாட்சி இல்லையா?.. எப்போ வீட்டுக்கு போவோம்னு தெரியாத மைக் ஹசி!.. பயங்கரமான லாக்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹசியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போச்சு!.. இனி அவ்ளோதான்!.. மனசாட்சி இல்லையா?.. எப்போ வீட்டுக்கு போவோம்னு தெரியாத மைக் ஹசி!.. பயங்கரமான லாக்!!

ஐபிஎல் அணிகளில் பபுள்களில் கொரோனா வைரஸ் நுழைந்ததால் தொடர் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு உறுதியான கொரோனா அடுத்தடுத்து சிஎஸ்கே, ஐதராபாத், டெல்லி அணிகளுக்கும் பரவியிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலில் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு தொற்று உறுதியான நிலையில் அடுத்ததாக பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹசிக்கும் பரவியது. அதைத்தொடர்ந்து, அவர் டெல்லியில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வரும் மே 15ம் தேதி வரை தடைவிதித்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் 37 பேர் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மே 15ம் தேதிக்கு பின்னர் நாடு திரும்பவுள்ளனர். மைக் ஹசி பூரண குணமடைந்த பிறகு மாலத்தீவு செல்வார் என திட்டமிடப்பட்டது. 

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வருபவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய அந்த அரசு தடைவிதித்துள்ளது. இதனால் மைக் ஹசி குணமடைந்தால் அவரை மாலத்தீவுக்கு அனுப்புவதில் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் ஹசிக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதில் நெகட்டீவ் என வந்தால் சென்னையிலேயே அவர் தங்க வேண்டியது சூழ்நிலை ஏற்படும். 

இதுகுறித்து பேசிய சிஎஸ்கே செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மைக் ஹசியால் சக வீரர்களுடன் மாலத்தீவில் இணைய முடியாதுதான். ஆனால், அவரின் பயணம் குறித்து தற்போதே எந்த முடிவும் எடுக்க முடியாது. ஏனெனில், ஹசியின் உடல் நிலை தான் தற்போது முக்கியம். அவருக்கு முதலில் கொரோனா நெகட்டீவ் என முடிவுகள் வரட்டும். அதன் பிறகு அவரை தாய் நாட்டிற்கு அனுப்புவது குறித்து திட்டமிடலாம். 

மைக் ஹசிக்கு நாளை கொரொனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. நாளை மறுநாள் தான் முடிவு தெரியவரும். எனவே நாங்கள் பொறுமையாக இருந்து மைக் ஹசியின் உடல் நலத்திற்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அவரின் உடல்நிலை நன்கு தேறிவருகிறது எனத்தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்