கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்க போறாங்க!.. வெறித்தனமான பயிற்சியில் சிஎஸ்கே!.. 'தல' & 'சின்ன தல' செம்ம சம்பவம் கன்ஃபார்ம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல்-காக சி.எஸ்.கே அணியில் தல தோனி மற்றும் சின்ன தல ரெய்னா மீண்டும் ஒன்றாக பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்க போறாங்க!.. வெறித்தனமான பயிற்சியில் சிஎஸ்கே!.. 'தல' & 'சின்ன தல' செம்ம சம்பவம் கன்ஃபார்ம்!

14வது ஐபிஎல் தொடர் கடந்த முறை வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் இந்த முறை இந்தியாவில் ஏப்.9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அணிகளுக்கு ஹோம் அட்வாண்டேஜ் (home advantage) கொடுக்கப்படவில்லை.

இதனால், முதலில் ஹோம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிய தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி, தனது பயிற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.  

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. கடந்த சீசனில் மிக மோசமாக விளையாடி தொடரில் இருந்து வெளியேறிய சி.எஸ்.கே அணி இந்த முறை come back கொடுப்பதற்காக மார்ச் 8ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வந்தது.

இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போது மும்பையில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், கேப்டன் தோனி தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் மற்றும் ஒரு சிறப்பாக சின்ன தல ரெய்னா, தோனியுடன் சேர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வுபெற்ற நிலையில் தங்களது ஸ்டைலில் மீண்டு கிரிக்கெட் களத்தில் ஒன்றினைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

கடந்த சீசனின் சி.எஸ்.கே அணிக்காக ஆடவிருந்த ரெய்னா, இறுதியில் தொடரில் பங்கேற்கவில்லை. ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை எனக்கூறப்பட்டது. எனவே, கடந்த சீசனில் விட்ட மொத்த வெறியையும் இந்த சீசனில் தோனி, ரெய்னா என இருவருமே தீர்த்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சென்னை அணி இந்தாண்டு தனது முதல் போட்டியாக ஏப்ரல் 10ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸுடன் மோதுகிறது. பின்னர் ஏப்ரல் 16ம் தேதி பஞ்சாப் கிங்ஸ், ஏப்ரல் 19ம் தேதி ராஜஸ்தான் அணி, ஏப்ரல் 21 கொல்கத்தா அணி, ஏப்ரல் 25ம் தேதி பெங்களூர் அணியுடனும் மோதுகிறது. எனவே, தற்போது மும்பைக்கு சென்றுள்ள சென்னை அணி அங்கு ஒரு மாத காலம் இருக்க திட்டம் போட்டுள்ளது.

 

 

 

மற்ற செய்திகள்