'நாங்க பழைய தோனிய எப்பதான் பார்க்குறது'?.. ரசிகர்கள் ஆதங்கம்!.. விடாப்பிடியாக இருக்கும் சிஎஸ்கே!.. இந்த சிக்கலுக்கு ஒரு முடிவே இல்லயா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே கேப்டன் தோனியின் பேட்டிங் பொசிஷன் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துகள் பரவி வரும் நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் இருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்று come back கொடுத்துள்ளது.
நேற்றைய போட்டியின் போது கேப்டன்சியில் மீண்டும் தன்னை நிரூபித்த தோனி, பேட்ஸ்மேனாக இன்னும் பெரியளவில் ஏதும் செய்யவில்லை. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 200 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்த தோனி இந்தாண்டு ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதுகுறித்த வீடியோக்களும் வைரலானது. இவரின் கேப்டன்சியில் சென்னை அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது.
எனினும், தோனியின் அதிரடி பேட்டிங்கை சிஎஸ்கே அணி ரசிகர்கள் மிஸ் செய்து வருகின்றனர். இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளில் 2 இன்னிங்ஸ்களில் பேட்டிங்கிற்கு களமிறங்கிய கேப்டன் தோனி, முதல் போட்டியில் டக் அவுட் மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். தோனி 6-7வது வீரராக களமிறங்குவதே இதற்கு காரணம். அவர் 4 - 5வது வீரராக களமிறங்கி பிரஷர் இன்றி ஆட வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங், ஒவ்வொரு முறையும் தோனி மிடில் ஆர்டரில் விளையாடும் போது, தன்னை மேம்படுத்திக்கொண்டே வருகிறார். அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ளதால் பேட்டிங் ஆர்டரை சரிசெய்வது சவாலாக உள்ளது. ஆனால், தோனியின் பேட்டிங் ஆர்டரை மேல் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. ஜடேஜாவை கீழ் இறக்கிவிட்டு தோனியை மேல் கொண்டு செல்லலாம். ஆனால், தற்போது அது முக்கியமில்லை.
தற்போது எங்கள் கவனம் முழுவதும், பக்காவான ஒரு பேட்டிங் ஆர்டரை உறுதிப்படுத்துவதில் தான் உள்ளது. நாங்கள் திட்டமிட்டபடி எங்களிடம் நிறைய சிறப்பான பேட்டிங் பலம் உள்ளது. அது சிஎஸ்கேவின் ஆட்டத்திற்கு ஊக்கமளிக்கிறது.
எனினும், அதனை நாங்கள் இன்னும் சரியான முறையில் ஒருங்கினைக்கவில்லை. அதனை சரிசெய்ய தோனி முக்கிய பங்கு வகிப்பார் என ஃபிளம்மிங் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்