'இது' தான் உண்மை!.. டாப் ஆர்டர் விக்கெட்டுகளை... வேட்டையாடியது 'இப்படி' தான்!.. சஹார் பவுலிங்-ஐ decode செய்த ரவி சாஸ்திரி!.. வெளியான வாவ் தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஹாரின் பந்துவீச்சு எப்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது என்பது குறித்து ரவி சாஸ்திரி விவரித்துள்ளார்.

'இது' தான் உண்மை!.. டாப் ஆர்டர் விக்கெட்டுகளை... வேட்டையாடியது 'இப்படி' தான்!.. சஹார் பவுலிங்-ஐ decode செய்த ரவி சாஸ்திரி!.. வெளியான வாவ் தகவல்!

14வது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மன்கள் சிஎஸ்கே பவுலர்களின் பந்துவீச்சில் சிக்கி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர். சிஎஸ்கே பவுலர் தீபக் சஹார் பஞ்சாப் பேட்ஸ்மன்களை திணற வைத்தார். இவர் தனது முதல் ஓவரிலே பஞ்சாப் தொடக்க வீரர் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை எடுத்தார்.

இதன்பிறகு கே எல் ராகுல் ஒரு ரன் எடுக்க முயன்று ரவிந்திர ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். தனது மூன்றாவது ஓவரை வீசிய தீபக் சஹார் கெயில் மற்றும் பூரன் விக்கெட்டை எடுத்தார். இதைத்தொடர்ந்து தனது நான்காவது ஓவரில் தீபக் ஹுடாவின் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.

இதன்மூலம் தீபக் சஹார் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி கெத்து காட்டியிருக்கிறார். இவர் 3.2 எக்னாமி ரேட் பெற்று இருக்கிறார். தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்த பஞ்சாப் அணியில் தமிழக வீரர் மட்டும் தனியாளாக நின்று 47 ரன்கள் குவித்தார்.

இதில் கே எல் ராகுல் 5, மயங்க் அகர்வால் 0, கெயில் 10, தீபக் ஹுடா 10, பூரான் 0, ரிச்சர்ட்சன் 15, அஸ்வின் 6, முகமது ஷமி 9 ரன்கள் குவித்தனர். இதன்மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் குவித்தனர். இதில் சிஎஸ்கே பவுலர் சாம் கரன், பிராவோ, மொயின் அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், சிஎஸ்கே பவுலர் தீபக் சஹாரின் பந்துவீச்சை கண்டு இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மிரண்டு போய் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் "இதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மை. சிறப்பாக ஸ்விங் பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்துவது, பேட்ஸ்மன்களின் ஆட்டத்தை நொறுக்கிவிட முடியும். தீபக் சஹார் சூப்பரான வேரியேஷன்களில் வீசியிருக்கிறார்" என்று தன் ட்விட் மூலம் கூறியுள்ளார்.

 

 

 

மற்ற செய்திகள்