'ஒரு ப்ளேயர நம்பி சிஎஸ்கே இல்ல!.. அத மொதல்ல புரிஞ்சுக்கோங்க'!.. 'ஹாசல்வுட் இல்லாத குறைய... 'இவர்' தீர்த்து வைப்பாரு'!.. இந்த கணக்கு சரியா வருமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய பவுலர் ஜோஷ் ஹாசல்வுட் இந்த ஐபிஎல்லில் பங்கேற்காதது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்று ப்ராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

'ஒரு ப்ளேயர நம்பி சிஎஸ்கே இல்ல!.. அத மொதல்ல புரிஞ்சுக்கோங்க'!.. 'ஹாசல்வுட் இல்லாத குறைய... 'இவர்' தீர்த்து வைப்பாரு'!.. இந்த கணக்கு சரியா வருமா?

ஐபிஎல் தொடர் துவங்க சில தினங்களே உள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் ஹாசல்வுட் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அணியின் பௌலிங் ஆர்டர் சிறப்பாக இருந்த போதிலும், ஹாசல்வுட் வெளியேறியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரு வீரரை நம்பி அணி இல்லை என்றும், ஹாசல்வுட்டின் இடத்தை வேறொரு வீரர் சிறப்பாக நிரப்புவார் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சிஎஸ்கே அணி புதிய சிக்கலை சந்தித்துள்ளது. அந்த அணியின் ஜோஷ் ஹாசல்வுட் சொந்த காரணங்கள் மற்றும் தொடர்ந்த பயோ பபள் உள்ளிட்ட காரணங்களால் இந்த சீசனில் அணியை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளார். 

வரும் 10ம் தேதி மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் சிஎஸ்கே விளையாடவுள்ளது. இந்நிலையில், ஹாசல்வுட் அணியிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்த அணியில் லுங்கி நிகிடி, பிராவோ உள்ளிட்ட வீரர்கள் இருந்தாலும் கோப்பையை வெல்லும் தீவிரத்துடன் உள்ள சிஎஸ்கே புதிய வீரரை களமிறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில், ஹாசல்வுட்டுடன் இணைந்து சிஎஸ்கேவின் பௌலிங் ஆர்டர் இந்த சீசனில் சிறப்பாக உள்ளதாகவும், ஒரு வீரரை மட்டுமே நம்பி அணி இல்லை என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். மேலும், ஹாசல்வுட்டின் இடத்தை சிஎஸ்கே வீரர் லுங்கி நிகிடி சிறப்பாக நிரப்புவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதனிடையே, ஹாசல்வுட்டிற்கு பதிலாக களமிறக்கப்பட உள்ள புதிய வீரர் குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் சிஎஸ்கேவில் பௌலிங்கிற்கு தேவையான வீரர்கள் உள்ளதாகவும் சிஎஸ்கே தரப்பில் கூறப்பட்டுள்ளது. புதிய வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்