'போற போக்க பார்த்தா... வட்டிக்கு வாங்கி தான் ஐபிஎல் நடத்தணும் போலயே'!.. இது சரிபட்டு வராது!.. ஐபிஎல் நல்லா நடக்கணும்னா... மொதல்ல 'இத' பண்ணுங்க!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.
14வது ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து போட்டிகளும் 6 நகரங்களில் மட்டுமே நடத்தப்படும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதன்படி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. மேலும், இந்த தொடருக்கான 8 அணிகளும் வெவ்வேறு இடங்களில் முகாமிட்டு தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது மும்பை வாங்கடே மைதானத்தில் பணிபுரியும் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லி அணியின் வீரர் அக்சர் படேல், பெங்களூரு அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல், கொல்கத்தா அணியை சேர்ந்த வீரர் நிதிஷ் ராணா என அடுத்தடுத்து வீரர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஐபிஎல் போட்டி மும்பையில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கமும், கங்குலியும் அங்கு போட்டி நடப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் ஹைதராபாத்தில் போட்டியை நடத்த தயாராக இருப்பதாக முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஐபிஎல் வீரர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தான் ஒரே வழி என கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க வீரர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தான் ஒரே வழி என நினைக்கிறேன். கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என தெரியாது. எனவே, கிரிக்கெட் நிர்வாகத்துடன் பேசி விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என விவாதிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்