'சொந்த நாட்டுக்குள்ள அனுமதி கிடையாது... இங்க ஐபிஎல்லும் இல்ல'!.. 'எங்க போறது?.. என்ன செய்றது'?.. ரண வேதனையில் ஆஸ்திரேலிய வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஐபிஎல் ஆட வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

'சொந்த நாட்டுக்குள்ள அனுமதி கிடையாது... இங்க ஐபிஎல்லும் இல்ல'!.. 'எங்க போறது?.. என்ன செய்றது'?.. ரண வேதனையில் ஆஸ்திரேலிய வீரர்கள்!

2021 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் போட்டிகள் ஒரு பக்கம் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பல்வேறு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, 2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு வீரர்கள் எல்லோரும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பும் முடிவில் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரர்களாக எப்படியாவது தங்கள் சொந்த நாட்டிற்குள் செல்லும் திட்டத்தில் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மே 15 வரை இந்த விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவது சிக்கலாகி உள்ளது. 

இதையடுத்து மற்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானத்தில் சென்றுவிட்டு, பின் அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லும் முடிவில் இருக்கிறார்கள். அதன்படி தற்போது பல ஆஸ்திரேலியா வீரர்கள் மாலத்தீவு செல்லும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள், கோச்கள் எல்லோரும் மாலத்தீவிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். 

இதற்காக இவர்கள் டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு, பின்னர் ஆஸ்திரேலியா செல்லும் முடிவில் உள்ளனர். மற்ற வெளிநாட்டு வீரர்களும் அடுத்த 2 நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்