இளம்வீரரை 'தட்டித்தூக்கிய' சென்னை... எத்தனை 'கோடின்னு' தெரிஞ்சா... ஷாக் கன்பார்ம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட 8 அணிகளும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு வீரர்களை போட்டிபோட்டு தங்களது அணிகளுக்கு எடுத்து வருகின்றன. பிற அணிகள் வீரர்களை போட்டிபோட்டு எடுத்து வருவதால் சென்னை அணி யாரை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்தது.
LION ALERT!
Sweet Saapuda Porom with @CurranSM! #SuperFam #SuperAuction #WhistlePodu 🦁💛 pic.twitter.com/Vd0oYWqmgk
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2019
அந்த எதிர்பார்ப்புகளை ஈடுகட்டும் வகையில் இளம்வீரர் சாம் கரணை(21) சென்னை அணி முதல் வீரராக ஏலத்தில் எடுத்துள்ளது. சாம் கரணின் ஆரம்ப விலை 1 கோடியாக இருந்த நிலையில் பஞ்சாப், சென்னை அணிகள் அவரை எடுக்க போட்டிபோட்டன. கடைசியில் 5.5 கோடிகளுக்கு சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
மொத்தம் இருக்கும் 14.6 கோடியில் சுமார் 5.5 கோடிகள் கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் இளவயது வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது ஆச்சரியத்தை அளிப்பதாகவும், சாமை ஏலத்தில் எடுத்தது நல்ல சாய்ஸ் எனவும் பாராட்டி வருகின்றனர்.