10 கோடி, 15 கோடி... எக்கச்சக்கமாக 'வீரர்களின்' விலையை ஏற்றிவிட்டு... எஸ்கேப் ஆன அணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் காட்டில் தான் பணமழை பொழிந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 15.50 கோடிக்கும், கிளென் மேக்ஸ்வெல் 10.75 கோடிக்கும் ஏலம் போனார். மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணியும், கம்மின்ஸை கொல்கத்தா அணியும் ஏலத்தில் எடுத்தது.
ஏலத்தில் மேக்ஸ்வெல் பெயர் அறிவிக்கப்பட்டதும் அவரை வாங்க பஞ்சாப், டெல்லி அணிகள் இடையில் கடும் போட்டி நிலவியது. இதனால் இரு அணிகளும் ஏலத்தொகையை அதிகரித்துக் கொண்டே சென்றன. முடிவில் பஞ்சாப் அணி 10.75 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுத்தது.
இதேபோல கம்மின்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டதும் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது. ஆனால் உள்ளே வந்த டெல்லி அணி கம்மின்ஸை எடுக்க பெங்களூர் அணியுடன் போட்டிபோட்டது. 10 கோடியை தாண்டி ஏலம் நீடித்தது. 14.50 கோடியை தாண்டியவுடன் டெல்லி அணி பின்வாங்கியது.
இதனால் பெங்களூர் அணி 14.75 கோடிகளுக்கு கம்மின்ஸை ஏலத்தில் எடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, யாரும் எதிர்பாராத விதமாக கொல்கத்தா அணி இடையில் புகுந்து 15.50 கோடிக்கு கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற பெருமை கம்மின்ஸ்க்கு கிடைத்துள்ளது.