Kadaisi Vivasayi Others

ஒரே அணிகளில் பரம எதிரிகள்... அந்த சம்பவத்தை எல்லாம் மறந்துருப்பாங்களா? இனி என்ன நடக்க போகுதோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு: இன்று நடந்து வரும் ஐபிஎல் ஏலத்தில் பரம எதிரிகளான ஒரே அணியில் விளையாட இருப்பது பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது.

ஒரே அணிகளில் பரம எதிரிகள்... அந்த சம்பவத்தை எல்லாம் மறந்துருப்பாங்களா? இனி என்ன நடக்க போகுதோ

IPL AUCTION 2022- ஐபிஎல் ஏலம்: எங்களுக்கு அவர் தான் வேணும்... ஏலத்தில் அடம் பிடித்த CSK! போட்டி போட்ட SRH... ஆனால் கடைசில நடந்த சம்பவம்!

அஸ்வின் - பட்லர்

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) உடன் INR 5 கோடிக்கு ஏலம் போனார். ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விற்கப்பட்டதையடுத்து, அஸ்வின் இரண்டாவது ஆட்டக்காரராக ஏலம் போனார்.  டெல்லி கேபிடல்ஸ் மற்றும் RR அணிகள் 34 வயதான அஸ்வினை எடுக்க  கடுமையான முயற்சியில் ஈடுபட்டன.  பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை ஏலத்தில் எடுத்தது.

IPL Auction Ashwin Deepak Hooda Krunal Pandya Buttler RR Lucknow

இதன் மூலம், அவர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்டரான ஜோஸ் பட்லருடன் RR முகாமில் இணைய உள்ளார். 2019 IPL போட்டியில் ஜோஸ் பட்லரை மாங்கட் முறையில் அஸ்வின் பெயில்களை தட்டி விட்டு அவுட் ஆக்கியது சர்ச்சையானது.

இச்சம்பவத்தால் ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுனர்களில் இரு பிரிவு உருவானதால் கிரிக்கெட் விதி பற்றி விவாதங்கள் எழுந்தன. சிலர் இது விதிகளுக்கு உட்பட்டது என்று கூறி அஸ்வின் ஆதரிக்கும் போது, ​​​​அவர் ஏன் அவ்வாறு செய்வதற்கு முன் எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று அஸ்வினுக்கு எதிராக கேள்வி எழுப்பினர்.

IPL Auction Ashwin Deepak Hooda Krunal Pandya Buttler RR Lucknow

பட்லருக்கு ஆதரவாக ஆண்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் அஸ்வினுக்கு எதிராக சில செயல்களில் ஈடுபட்டனர். 

தீபக் ஹூடா - க்ருணால் பாண்டியா 

கடந்த ஆண்டு, பரோடா கிரிக்கெட் அணி (பிசிஏ) சையத் முஷ்டாக் அலி டிராபிக்கு முன் பெரும் பின்னடைவை சந்தித்தது, ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா பரோடா கேப்டன் க்ருனாலுடன் சண்டையிட்ட பிறகு பயோ-பபிளை விட்டு வெளியேறினார். BCA க்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், தீபக் ஹூடா க்ருனாலுக்கு எதிராக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை (கெட்ட வார்த்தையில் சக வீரர்களை திட்டுதல் உள்ளிட்ட) முன்வைத்தார். ஹூடாவுக்கு ஆதரவாக இர்பான் பதான் களமிறங்கினார். ஹூடா பரோடா அணியில் இருந்து வெளியேறினார்.

IPL Auction Ashwin Deepak Hooda Krunal Pandya Buttler RR Lucknow

ஹூடா புதிய ஐபிஎல் உரிமையாளரான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 5.75 கோடிக்கும், க்ருனால் ரூ.8.25 கோடிக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டனர். இந்நிலையில் நால்வரும் இப்போது கைகோர்த்து ஒரே அணிகளுக்காக விளையாடுவது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது. இருவரும் ஒரே அணியில் எப்படிச் செயல்படுவார்கள் என்பதைப் பார்க்கும் உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

IPL, RAVICHANDRAN ASHWIN, DEEPAK HOODA, ASHWIN, LUCKNOW, IPL AUCTION, KRUNAL PANDYA, JOS BUTTLER

மற்ற செய்திகள்