'நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்'!.. சொந்த ஊருக்கு கிளம்பும் முன்... சக வீரர்களிடையே 'பீதி'யை கிளப்பிய ஆண்ட்ரு டை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு டை கூறிய விஷயம் ஒன்று, சக ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

'நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்'!.. சொந்த ஊருக்கு கிளம்பும் முன்... சக வீரர்களிடையே 'பீதி'யை கிளப்பிய ஆண்ட்ரு டை!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒரு பக்கம் ஐபிஎல் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் பயோ பபுள் விதிகளோடு ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. 

தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையால், வரிசையாக வெளிநாட்டு வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

   

இந்த நிலையில்தான், கொரோனா தொற்றை காரணம் காட்டி முதல் ஆளாக ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு டை வெளியேறியுள்ளார். இது தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள அறிக்கைதான் ஆஸ்திரேலிய வீரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

ஆண்ட்ரு டை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது எல்லாம் டெஸ்ட் எடுத்து வரும் முடிவுகள். டெஸ்ட் எடுக்காமல் இன்னும் பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம். பலர் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கலாம். 

ஐபிஎல் பாதுகாப்பாகவே நடக்கிறது. பிசிசிஐ நன்றாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. எனினும், வைரஸ் தொற்று வேகமெடுக்கும் போது, மக்கள் இப்படி அவதிப்படும் நிலையில் கிரிக்கெட் ஆடுவது கஷ்டத்தை தருகிறது. மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது நாங்கள் ஐபிஎல் ஆடுவது வருத்தமளிக்கிறது. 

அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நான் தாமதம் செய்தால் வீட்டிற்கு போக முடியுமா என்று தெரியவில்லை. விமான பயணம் அனுமதிக்கப்படுமா என்று தெரியவில்லை. அதனால்தான் இப்போதே ஊருக்கு கிளம்புகிறேன். விமான பயணம் அனுமதிக்கப்படும் போதே சொந்த ஊருக்கு செல்லப் போகிறேன் என்று கூறியுள்ளார். 

இவரின் இந்த பேச்சுதான் ஐபிஎல்லில் ஆடும் ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு விமான பயணம் அனுமதிக்கப்படுமா? இந்தியாவில் இருந்து திரும்பி செல்ல முடியுமா? இல்லை லாக்டவுனில் மாட்டிக்கொள்வோமா என்ற கலக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அரசு விமான பயணத்தை நிறுத்தும் திட்டத்தில் உள்ளது. 

ipl andrew tye wonders franchises spending so much amid covid crisis

இதனால் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்மித் என்று பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் வெளியேற வாய்ப்புள்ளது என்கிறார்கள். லாக்டவுன் காரணமாக இந்தியாவில் மாட்டிக்கொள்ளாமல், விமானப் போக்குவரத்து இருக்கும் போதே சொந்த ஊருக்கு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன் போன்ற வீரர்களும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்