'போச்சு!.. வார்னரைப் போலவே கேப்டன் பதவியை... இழக்கப் போகும் மற்றொரு வீரர்'!?.. தீவிர கண்காணிப்பு!.. பதவிய காப்பத்திக்க வழி இருக்கா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் அணியை தொடர்ந்து மற்றுமொரு அணியின் கேப்டன் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

'போச்சு!.. வார்னரைப் போலவே கேப்டன் பதவியை... இழக்கப் போகும் மற்றொரு வீரர்'!?.. தீவிர கண்காணிப்பு!.. பதவிய காப்பத்திக்க வழி இருக்கா?

2021 ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் இதுவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி உள்ளது. அதில் ஐந்து தோல்விகளை பெற்று, ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதாபத்திற்குரிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளது.

வார்னர் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் சொதப்பி வருகிறார். பேட்டிங்கிலும் நல்ல ஃபார்மில் இல்லை, அணியை தலைமைதாங்கி வழிநடத்துவதிலும் தெளிவு இல்லை. இதன் காரணமாகவே அவர் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகி, ஹைதராபாத் அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது.

டேவிட் வார்னர், 2014 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் அணிக்காக விளையாட தொடங்கினார். இதுவரை ஹைதராபாத் அணிக்காக 4 ஆயிரம் ரன்களை குவித்த ஒரே வீரர் அவர்தான். மேலும், மூன்று வருடங்கள் அதிக ரன்களை குவித்து, ஹைதராபாத் அணி சார்பாக ஆரஞ்சு கேப்பையும் அவரே கைப்பற்றினார். 2016ம் ஆண்டு தனியாளாக போராடி அந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதல் கோப்பையை பெற்றுத்தந்தார். அதுமட்டுமின்றி, மூன்று ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அழைத்துச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரே ஆண்டு சரியாக செயல்படாத காரணத்தினால் அவரை கேப்டன் பதவியிலிருந்து தூக்கியது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. எனினும், கேப்டன் பதவி கேன் வில்லியம்சன்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் மிக அற்புதமாக தலைமை தாங்கக்கூடிய வீரர் ஆவார். வார்னர் இல்லாத பொழுது 2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மிகச் சிறப்பாக தலைமை தாங்கி இறுதிவரை கேன் வில்லியம்சன் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹைதராபாத் அணியை போலவே கொல்கத்தா அணியும் மிக மோசமாக விளையாடி வருகிறது. 7 போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று, மற்ற ஐந்து போட்டிகளிலும் தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியை இயான் மோர்கன் சரியாக தலைமை தாங்க தவறியுள்ளதாக அந்த அணியின் ரசிகர்கள் கருதுகிறார்கள். மேலும், 7 போட்டிகளில் வெறும் 92 ரன்களை மட்டுமே எடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, ஹைதராபாத் அணியில் ஏற்பட்ட மாற்றம் போல கொல்கத்தா அணியிலும் ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. கேப்டன் பதவியை மோர்கனிடமிருந்து தினேஷ் கார்த்திக்கு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. ஆனால், கடந்த சீசனின் பாதியில், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பு தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து இயான் மோர்கனிடம் சென்றது. அப்போது, தினேஷ் கார்த்திக்கைவிட இயான் மோர்கன் சிறப்பாக அணியை வழி நடத்துவார் என்று கூறப்பட்டது. இப்போது, மீண்டும் தினேஷ் கார்த்திக் இடமே கேப்டன் பொறுப்பை அளிக்க வேண்டும் என கருத்துகள் உலா வருகின்றன.

எனினும், இத்தனை குழப்பத்துக்கும் மத்தியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இது வெறும் வதந்தி தான் என கொல்கத்தா அணி கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்