IPL2023: ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம்.. இலவசமாக IPL போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் முன்னணி OTT!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பாண்டில் ஐபிஎல் டி 20 லீக் தொடர் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.

IPL2023: ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம்.. இலவசமாக IPL போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் முன்னணி OTT!

Images are subject to © copyright to their respective owners.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பல கிரிக்கெட் வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதால் இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாக களமிறங்கி இருந்தன.  களமிறங்கிய முதல் ஐபிஎல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தி இருந்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. முன்னதாக, ஐபிஎல் மினி ஏலமும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து ஐபிஎல் 2023 தொடர் ஆரம்பமாவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்த்து  வந்தனர். அந்த வகையில், தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைகிறது.

மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில், ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 7 போட்டிகளை தங்களின் ஹோம் கிரவுண்டிலும், மீதமுள்ள 7 போட்டிகளை மற்ற மைதானங்களில் ஆடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 IPL 2023 will be stream on Jio Cinema app for free

Images are subject to © copyright to their respective owners.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் வென்றுள்ளது, அதே நேரத்தில் டிஜிட்டல் உரிமைகளை முகேஷ் அம்பானியின் Viacom18 நிறுவனம் வென்றுள்ளது. இந்நிலையில் Viacom18 நிறுவனத்தின் ஜியோ சினிமா நிறுவனம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜியோ செயலி மற்றும் இணையதளம் மூலம் ரசிகர்கள் இந்த தொடரை எவ்வித கட்டணமும் இன்றி பார்க்கலாம். போட்டிகளை காண ஆண்டு சந்தா மற்றும் மாத சந்தா கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL, IPLOPENINGCEREMONY, IPL11, IPL, JIO CINEMA

மற்ற செய்திகள்