BCCI போட்ட பிளான் B - இந்த IPL சீரிஸ் முழுவதும் அங்க மட்டும்தான் நடக்கும் போலயே?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆண்டிற்கான IPL  போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டாவது திட்டம் ஒன்றினை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BCCI போட்ட பிளான் B - இந்த IPL சீரிஸ் முழுவதும் அங்க மட்டும்தான் நடக்கும் போலயே?

இந்த ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் 15வது IPLபோட்டிகளை இந்தியாவில் நடத்துவதாக இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI முன்னரே அறிவித்திருந்தது. கடந்த சீசனில் மொத்தம் 8 அணிகள் தொடரில் களமிறங்கிய நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் 15வது IPL போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

அவங்க கேட்பதை கொடுங்க... ஆதார், ரேஷன் கார்டு தேவையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

கொரோனா பரவல்

IPL 2022 : BCCI having plan B for the upcoming IPL series

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது பல்வேறு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 1.35 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை கருத்தில்கொண்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்ததும் நோக்கில் பிளான் பி ஒன்றினை இந்திய கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.

பிளான் B

IPL 2022 : BCCI having plan B for the upcoming IPL series

இந்த திட்டத்தின்படி, நடப்பாண்டின் அனைத்து ஐ.பி.எல். ஆட்டங்களையும் மராட்டிய மாநிலம் மும்பையில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. அங்குள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவீன் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 3 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. போட்டிகள் நடைபெறும் காலத்தில் கொரோனா நிலவரத்தை  கொண்டு  இந்த பிளான் B செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL 2022 : BCCI having plan B for the upcoming IPL series

ஜனவரி 14ஆம் தேதியில இருந்து ஊரடங்கா? பொங்கல் அப்போ இருக்குற தடை என்ன? எதுக்கெல்லாம் அனுமதி?

ஏலம்

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13-ந் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என முன்னேறி அறிவிக்கப்பட்டிருந்தது. நட்சத்திர வீரர்களை எடுக்கப்போகும் அணிகள் எவை? எவை? என்பதைத் தெரிந்துகொள்ள ஐ.பி.எல்  ஆர்வமாக உள்ளனர்.

IPL 2022 : BCCI having plan B for the upcoming IPL series

IPL, BCCI, IPL SERIES, IPL 2022, INDIAN CRICKET BOARD, PLAN B, IPL சீரிஸ், கொரோனா, பிளான் பி

மற்ற செய்திகள்