‘வில்லியம்சனுக்கு என்னதான் ஆச்சு..?’.. அவரை எடுக்காததுக்கு ‘இதுதான்’ காரணமா..? சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் கேன் வில்லியம்சன் ஏன் இடம்பெறவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘வில்லியம்சனுக்கு என்னதான் ஆச்சு..?’.. அவரை எடுக்காததுக்கு ‘இதுதான்’ காரணமா..? சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 9-வது போட்டி இன்று (17.04.2021) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

IPL 2021: Why is Kane Williamson not playing today?

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி காக் (40 ரன்கள்) மற்றும் ரோஹித் ஷர்மா (32) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாத்வ (10 ரன்கள்), இஷான் கிஷன் (12), ஹர்திக் பாண்ட்யா (7 ரன்கள்) உள்ளிட்டோர் சொற்ப ரன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

IPL 2021: Why is Kane Williamson not playing today?

இதில் பொல்லார்டு மட்டுமே 22 பந்துகளில் 35 ரன்கள் அடித்து ஆறுதல் அடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை மும்பை அணி எடுத்தது. ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை விஜய் சங்கர் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது 1 விக்கெட்டும் எடுத்தனர்.

IPL 2021: Why is Kane Williamson not playing today?

இந்த நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் கேன் வில்லியம் சன் ஏன் ப்ளேயிங் லெவனில் இடம்பெறவில்லை ? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்த இரு போட்டிகளிலும் முதலில் ஹைதராபாத் அணி வெற்றி பெரும் நிலையில் இருந்தது. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததால், கைக்கு வந்த வெற்றியை ஹைதராபாத் அணி நழுவவிட்டது.

IPL 2021: Why is Kane Williamson not playing today?

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் கேன் வில்லியம்சன் இடம்பெறாதது குறித்து விமர்சனம் செய்திருந்தார். போட்டியை கடைசி வரை முடிக்க வில்லியம்சன் போன்ற அனுபவம் மிக்க வீரர் அணிக்கு தேவை என அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியிலும் அவர் இடம்பெறாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆனால் கேன் வில்லியம்சன் காயம் காரணமாகதான் விளையாடாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது.

tform.twitter.com/widgets.js" charset="utf-8">

மற்ற செய்திகள்