'மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை... 'இத்தனை' வீரர்கள் மிஸ் பண்றாங்களா'!?.. இடியாக வந்த தகவல்!.. கலக்கத்தில் பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடைபெற்றால் அயல்நாட்டு நட்சத்திர வீரர்கள் இன்றி தான் போட்டிகள் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

'மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை... 'இத்தனை' வீரர்கள் மிஸ் பண்றாங்களா'!?.. இடியாக வந்த தகவல்!.. கலக்கத்தில் பிசிசிஐ!

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 3வது வாரத்தில் தொடங்கி அக்டோபர் 10ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதற்காக தயாராகும் வேலைகளில் அனைத்து நாடுகளும் இறங்கியுள்ளன. அடுத்து வரும் 3 மாதங்களில் முடிந்தவரை பல டி20 தொடர்களில் விளையாடி வீரர்களை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதனால் செப்டம்பர் - அக்டோபரில் நடைபெறும் ஐபிஎல்-ல் முக்கிய அயல்நாட்டு வீரர்கள் இருக்க மாட்டார்கள் என தெரிகிறது. 

இங்கிலாந்து அணி வங்கதேசத்துடன் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் பங்கேற்கிறது. அதே போல பாகிஸ்தான் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடுகிறது. இதனால் ஐபிஎல்-ல் வழக்கமாக விளையாடும் இங்கிலாந்து வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க சென்றுவிடுவார்கள்.

குறிப்பாக மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், இயான் மோர்கன், ஜாஸ் பட்லர், லியாம் லிவிங்க்ஸ்டன், சாம் கரண், டாம் கரண், க்றிஸ் வோக்ஸ், ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், டேவிட் மாலன், கிறிஸ் ஜோர்டன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் இந்த ஐபிஎல்-ல் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.

நியூசிலாந்து அணியானது அடுத்ததாக பாகிஸ்தானுடன் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெறுகிறது. இதனால் நாட்டிற்காக அவர்கள் விளையாட சென்றுவிடுவார்கள் என கூறப்படுகிறது.

இதன் விளைவாக கேன் வில்லியம்சன், ஆடம் மில்ன், ட்ர்ண்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர், லாகி ஃபெர்க்யூசன், டிம் செய்ஃப்ரெட், ஃபின் ஆலன், கெயில் ஜேமிசன் ஆகியோர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் குறைவு.

அதைப் போலவே, ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக அக்டோபரில் இலங்கை அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் டி20 போடி தொடரில் பங்கேற்கிறது. இதனால் இவர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்பார்களா என்பதில் சந்தேகமே.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை, மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், ஜெயி ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், ரைலே மெரிடித், நாதன் கோல்டர் நைல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், டேன் கிறிஸ்டியன், கிறிஸ் லின், ஆண்ட்ரூ டை, பென் கட்டிங், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், ஹென்ரிக்யூஸ், ஆடம் சாம்பா இந்த பட்டியலில் அடங்குவர்.

அடுத்ததாக, தென்னாப்பிரிக்க அணி செப்டம்பர் மாதத்தில் நெதர்நாலந்து அணிக்கு எதிராக டி20 தொடர் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே சில வீரர்கள் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் கலந்துக்கொள்ள சென்றுவிடுவார்கள். எனவே, மீதமுள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.

அந்த வகையில் டிகாக், ஃபாப் டுப்ளசிஸ், இம்ரான் தாஹீர், ரபாடா, ஆன்ரிக் நார்ட்ஜே, கிறிஸ் மோரிஸ், டேவிட் மில்லர், லுங்கி நெகிடி, மார்கோ ஜான்சென் ஆகியோர் பங்கேற்பது சந்தேகம் தான்.

வங்கதேச அணியை பொறுத்தவரை கண்டிப்பாக தங்களது வீரர்களை ஐபிஎல்-க்காக அனுப்பாது என்பது தெரிகிறது. ஏனெனில், ஐபிஎல் தொடரின் போது அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடுகிறது. இதனால் சகிப் அல் ஹசன், முஸ்திவிசூர் ரஹ்மான் ஆகியோர் ஐபிஎல்-ல் விளையாடுவதில் சிக்கல் உள்ளது.

மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை, அந்நாட்டின் உள்நாட்டு தொடரான கரிபீயன் ப்ரீமியர் லீக் நடைபெறவுள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 19ம் வரை நடக்கிறது. ஒருவேளை அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்க விரும்பினால், 10 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு தாமதாக பங்கேற்பார்கள்.

அப்படி இருக்கும் பட்சத்தில் கெயிரன் பொல்லார்ட், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரண், ஆண்ட்ரே ரஸல், ஹெட்மெயர், சுனில் நரேன், ஃபாபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஜேசன் ஹோல்டர் முதலிய வீரர்கள் பங்கேற்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதே போல ஆஃப்கானிஸ்தான் அணியும் பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதனால் அந்நாட்டின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐபிஎல்-ல் பங்கேற்பது சிரமம்.

 

மற்ற செய்திகள்