‘சில விதிமீறல் இருந்துச்சு’!.. ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து ‘கேன் வில்லியம்சன்’ கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

‘சில விதிமீறல் இருந்துச்சு’!.. ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து ‘கேன் வில்லியம்சன்’ கருத்து..!

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடரை பிசிசிஐ தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடிய சில கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பிசிசிஐ இந்த  நடவடிக்கையை எடுத்தது.

IPL 2021 suspends was the right decision, says Kane Williamson

இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரீயர் ஆகிய இருவருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் வீப்பர் சாஹா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

IPL 2021 suspends was the right decision, says Kane Williamson

இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இப்படி அடுத்தடுத்து பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைத்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து வீர்ரகளும் அவர்களுக்கு சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

IPL 2021 suspends was the right decision, says Kane Williamson

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் ஒத்திவைத்தது குறித்து நியூஸிலாந்து வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்தியாவில் கொரோனா மிக வேகமாக அதிகரித்தது. நாங்கள் விளையாடியபோது பயோ பபுளில் இருந்தோம். அது மிக சிறப்பாக இருந்தது. அதில் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டனர்.

IPL 2021 suspends was the right decision, says Kane Williamson

ஆனாலும் அதில் சில மீறல்கள் இருந்தன. இதனால்தான் போட்டியை தொடர முடியவில்லை. ஐபிஎல் தொடரை ஒத்தி வைத்தது சரியான முடிவுதான். கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதற்கு முன்னதாகவே, நாங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தோம். எங்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல பல பேர் அற்பணிப்புடன் செயல்பட்டனர்’ என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்