'வருமானமே இல்ல... எப்படியாவது ஐபிஎல் நடத்தி... கல்லா கட்ட ப்ளான்'!.. 'ஒரே அடியாக ஊத்தி மூடிய துயரம்'!.. சோதனை மேல் சோதனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரை நடத்த மிக ஆர்வமாக இருந்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் எண்ணத்துக்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

'வருமானமே இல்ல... எப்படியாவது ஐபிஎல் நடத்தி... கல்லா கட்ட ப்ளான்'!.. 'ஒரே அடியாக ஊத்தி மூடிய துயரம்'!.. சோதனை மேல் சோதனை!

உலகளவில் கொரோனா 2வது அலை பல நாடுகளை படுத்தி எடுத்துவிட்டது. குறிப்பாக, இந்தியாவை புரட்டி எடுத்து வருகிறது. நாள்தோறும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், ஓரளவுக்கு மக்களுக்கு பொழுதுபோக்கை கொடுத்து வந்த ஐபிஎல் 2021 தொடரும், கொரோனா காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருப்பதால், இப்போதைக்கு இங்கு மீண்டும் ஐபிஎல் தொடங்க வாய்ப்பே இல்லை. பிசிசிஐ தலைவர் கங்குலியும் இதனை உறுதிப்படுத்திவிட்டார்.

அதேசமயம், மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களுடன், பிசிசிஐ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொரோனா தாக்கம் குறைவாக இருக்கும் நாடுகளின் வாரியங்களிடம் பேசி வருகிறது. 

இதற்கிடையே, நாங்கள் ஐபிஎல் தொடரை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. மற்ற நாடுகள் அமைதியாக இருக்கும் சூழலில், இலங்கை தங்களாகவே முன்வந்து தொடரை நடத்தித் தருவதாக கூறியது.

இதன் மூலம், மீண்டும் ஐபிஎல் தொடரை, அதுவும் இந்தியாவின் பருவ நிலையை ஒத்த, பக்கத்து நாட்டில் எளிதாக நடத்த முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொழும்பு, பல்லேகல்லே, சூரியவேவா, டம்புலா ஆகிய நான்கு ஸ்டேடியங்களில் போட்டிகளை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, லங்கா பிரீமியர் லீக் நடத்திய அனுபவமும் அந்த நாட்டின் வாரியத்துக்கு உள்ளதால், மீண்டும் ஐபிஎல் தொடங்குவதற்கான அனைத்து சாதகமான அமசங்களும் நிறைந்திருந்தன. எனினும், பிசிசிஐ தொடர்ந்து மவுனம் காத்து வந்தது. 

               

ஆனால், இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கொரோனா மீண்டும் இந்த விவகாரத்தில் விளையாடிவிட்டது. நேற்று (மே 13) ஒரே நாளில் மட்டும் இலங்கையில் 3,269 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இதன் மூலம், இலங்கையில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று மட்டுமல்ல, கடந்த சில நாட்களாகவே, தினசரி பாதிப்பு 3000 தாண்டி எகிறி வருகிறது. 

இதனால், ஐபிஎல் தொடரை நடத்தி, துவண்டு கிடக்கும் தங்கள் வாரியத்தின் அக்கவுண்ட்டை ஓரளவுக்காவது நிரப்பலாம் என்று கணக்கு போட்ட இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கனவு கலைந்துவிட்டது. அதேசமயம், இலங்கையில் ஐபிஎல் நடைபெற்றால், அந்த டிராக்குகள் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற ரேஞ்ச் வரை கணக்குப் போட்ட சிஎஸ்கே ரசிகர்களின் கனவும் கரைந்துவிட்டது.

 

மற்ற செய்திகள்