ஏலத்தில் ‘சச்சின் பேபி’-யை எடுத்த ஆர்சிபி.. ரசிகர் ஒருவர் கேட்ட ‘கேள்வி’.. மொத்தமாக குழம்பிப் போன ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக்கொண்டு வீரர்களை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் சச்சின் பேபி என்ற வீரரை ஆர்சிபி அணி ஏலத்தில் 20 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்துள்ளது.
இதனை அறிவித்ததும் ரசிகர்கள் அனைவரும் இது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர் என குழப்பி போயினர்.
You mean Arjun Tendulkar?
— 𝓢𝓪𝓾𝓻𝓪𝓿 😎 (@SalluCommunity) February 18, 2021
ஆனால் உண்மையில் சச்சின் பேபி என்ற வீரர் கேரள மாநிலம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர். 32 வயதான சச்சின் பேபி ரஞ்சி, விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
கடந்த 2013 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியிலும், 2016ம் ஆண்டு பெங்களூரு அணியிலும், 2018ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணியிலும் சச்சின் பேபி இடம்பெற்றிருந்தார்.
Sachin Baby, is #NowARoyalChallenger! 🤩
A huge warm welcome to the RCB #ClassOf2021. 🙌🏻
Price: 2️⃣0️⃣L@sachinbabyy#PlayBold #BidForBold #WeAreChallengers #IPLAuction pic.twitter.com/5jlUm1Z3o2
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 18, 2021
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி மீண்டும் சச்சின் பேபியை எடுத்துள்ளது.
மற்ற செய்திகள்