VIDEO: நேத்து மேட்ச்சோட ‘ஹைலைட்டே’ இதுதான்.. கடைசி ஓவரின் கடைசி பந்தை இப்படி அடிப்பார்ன்னு பும்ராவே எதிர்பார்த்திருக்க மாட்டாரு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டு பிளசிஸும் களமிறங்கினர். இதில் டு பிளசிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய மொயின் அலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை சென்னை அணி பறிகொடுத்து. இந்த இக்கட்டான சமயத்தில் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா கூட்டணி நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ஜடேஜா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் (88 ரன்கள்) தனது பொறுப்பை ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதிலும் பும்ரா வீசிய போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து மிரள வைத்தார். அதேபோல் 8-வது வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் பிராவோ 8 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சென்னை அணி எடுத்தது.
Rituraj X Mr 360° #IPL2O21 #CSKvsMI pic.twitter.com/37SxJPe93V
— Ashok Muwal 🇮🇳 (@ashok_muwal_) September 19, 2021
இதனை அடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. ஆனால் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 136 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
மற்ற செய்திகள்