VIDEO: ‘யாரு சாமி நீ’.. 144 கி.மீ வேகம், சிதறிய ஸ்டம்ப்.. மிரண்டு போய் நின்ற யுனிவெர்சல் பாஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் போல்டான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: ‘யாரு சாமி நீ’.. 144 கி.மீ வேகம், சிதறிய ஸ்டம்ப்.. மிரண்டு போய் நின்ற யுனிவெர்சல் பாஸ்..!

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு உடல்நிலை சரியில்லாததால் இப்போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் கேப்டன் பொறுப்பை மேற்கொண்டார்.

IPL 2021: Rabada’s full-toss sends Chris Gayle stumps flying

இந்த நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் 12 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த கிறிஸ் கெய்லும் 13 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

IPL 2021: Rabada’s full-toss sends Chris Gayle stumps flying

இதனைத் தொடர்ந்து வந்த டேவிட் மாலன், மயங்க் அகர்வாலுடன் கூட்டணி அமைத்து ஓரளவுக்கு நிதானமாக ஆடினார். அப்போது அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் போல்டாகி டேவிட் மாலனும் (26 ரன்கள்) அவுட்டாகினார். இதனால் 87 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது.

IPL 2021: Rabada’s full-toss sends Chris Gayle stumps flying

இதனைத் தொடர்ந்து வந்த தீபக் ஹூடா (1 ரன்), ஷாருக் கான் (4 ரன்), கிறிஸ் ஜோர்டன் (2 ரன்) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்ஹ்டு அவுட்டாகினர். ஆனாலும் தனி ஒருவனாக விளையாடிய கேப்டன் மயங்க் அகர்வால் 99 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது.

IPL 2021: Rabada’s full-toss sends Chris Gayle stumps flying

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 17.4 ஓவர்களில் 167 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 69 ரன்களும், ப்ரீத்வி ஷா 39 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

IPL 2021: Rabada’s full-toss sends Chris Gayle stumps flying

இந்த நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் போல்டான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதல் இன்னிங்ஸில் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ரபாடா வீசிய 6-வது ஓவரை கிறிஸ் கெய்ல் எதிர்கொண்டார். அந்த ஓவரின் முதல் பந்தை கெய்ல் சிக்சருக்கு விளாசினார்.

அடுத்த பந்தை சுமார் 144 கிமீ வேகத்தில் ஃபுல் டாசாக ரபாடா வீசினார். இது கெய்லை போல்டாகி ஸ்டம்பை சிதற வைத்தது. இதனால் ஒரு நொடி கிறிஸ் கெய்லே மிரண்டு போய்விட்டார். இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்