‘அவரும் எவ்வளவுதான் பொறுமையா இருப்பாரு’!.. கூல் கேப்டனை டென்சனாக்கிய ‘அந்த’ சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே கேப்டன் தோனி கோபமாக காணப்பட்டார்.
நடப்பு ஐபிஎல் ஐபிஎல் தொடரின் 2-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களும், மொயின் அலி 36 ரன்ளும், சாம் கர்ரன் 34 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டகாரர்களாக ஷிகர் தவான் மற்றும் ப்ரீத்வி ஷா களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்த இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் சென்னை அணி திணறியது. முதல் பாதி வரை கூலாக இருந்த கேப்டன் தோனி, பவர் ப்ளே முடிந்த பிறகு சற்று கோபமாக காணப்பட்டார்.
அதற்கு காரணம், ஷிகர் தவான்-ப்ரீத்வி ஷா கூட்டணி சிஎஸ்கே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துதான். நீண்ட நேரமாக இவர்களது பார்ட்னர்ஷிப்பை சென்னை அணியால் பிரிக்க முடியவில்லை. மேலும் ரன்களும் தாறுமாறாக சென்றது. சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ரன்கள் செல்வதை கட்டுப்படுத்த தவறினர்.
குறிப்பாக பிராவோ ஸ்லோ பாலை தவிர புதிதாக எதையும் முயற்சி செய்யவில்லை. அதேபோல் தீபக் ஷகரும் சரியான லைனில் பந்தை வீசி ரன்களை கட்டுப்படுத்தவில்லை. இதனால் மைதானத்தில் வழக்கத்தை விட கேப்டன் தோனி சற்று கோபமாகவே காணப்பட்டார்.
இதனை அடுத்து அடிக்கடி பிராவோவுடன் ஆலோசனையில் தோனி ஈடுபட்டார். விக்கெட் ஏதும் விழாமல் அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது, ப்ரீத்வி ஷா அடித்த பந்தை மிட்செல் சாண்ட்னர் கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டார். இது தோனிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மீண்டும் ஒரு முறை ப்ரீத்வி ஷா கேட்ச் கொடுக்க, அதை ருதுராஜ் கெய்க்வாட் தவறவிட்டார். இதனால் கோபத்தில் அவரைப் பார்த்து கடுமையாக திட்டினார்.
பொதுவாக கூலாக காணப்படும் தோனி, சிஎஸ்கே வீரர்கள் வீரர்கள் அடுத்தடுத்து கேட்ச்களை தவறவிட்டதால் கோபமடைந்தார். இந்த நிலையில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் அடித்து டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
மற்ற செய்திகள்