‘இதுவரை ஒரு தடவை கூட கப் ஜெயிக்கல’!.. பெயரை மாற்றப் போகும் ஐபிஎல் அணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் டி20 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘இதுவரை ஒரு தடவை கூட கப் ஜெயிக்கல’!.. பெயரை மாற்றப் போகும் ஐபிஎல் அணி..!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் வழங்கிவிட்டன.

IPL 2021: KXIP to be renamed Punjab Kings

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். மொத்தமாக 1,114 சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதில் 292 வீரர்களை இறுதி செய்து பிசிசிஐ பட்டியலை வெளியிட்டது.

IPL 2021: KXIP to be renamed Punjab Kings

இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த முறை 16 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டு 9 வீரர்களை விடுவித்துள்ளது. ஏலத்தில் 5 வெளிநாட்டு வீரர்களையும், 4 உள்நாட்டு வீரர்களையும் கிங்ஸ் லெவன் அணியால் வாங்க முடியும். தற்போது அந்த அணியிடம் ரூ.53.20 கோடி இருப்பில் இருக்கிறது.

IPL 2021: KXIP to be renamed Punjab Kings

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த ஐபிஎல் சீசனில் இருந்து பெயரை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாகவே தங்கள் அணியின் பெயரை மாற்றவேண்டும் என பிசிசிஐயிடம் அந்த அணி நிர்வாகம் கோரி வந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

IPL 2021: KXIP to be renamed Punjab Kings

அதன்படி, வரும் 14-வது ஐபிஎல் சீசனில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர், ‘பஞ்சாப் கிங்ஸ்’ என அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாததால், இந்த பெயர் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்