‘ப்ளேயிங் 11-ல கேதர் ஜாதவை எடுங்கய்யா’!.. ‘ஏன்னா அவருக்கு இந்த அனுபவம் இருக்கு’.. SRH-க்கு முன்னாள் வீரர் சொன்ன முக்கிய அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் கேதர் ஜாதவ் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீர்ர இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது போட்டி இன்று (17.04.2021) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை அணி, அடுத்து கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது.
அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தாங்கள் விளையாடிய கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்திலும், இதனை அடுத்து பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்த இரு போட்டிகளில் வெற்றிக்கான வாய்ப்பை கடைசி கட்டத்தில் ஹைதராபாத் அணி நழுவவிட்டது.
இந்த நிலையில் இன்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் கேதர் ஜாதவ் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பகிர்ந்த அவர், ‘ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் கேதர் ஜாதவ் இடம்பெற வேண்டும் என நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சென்னையில் விளையாடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. அந்த மைதானம் எப்படி இருக்கும் என அவருக்கு தெரியும்.
விஜய் சங்கர் ஒரு 2-3 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்திருந்தால், அவரை அணியில் நீங்கள் அணியில் வைத்திருக்கலாம். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் மிடில் ஆர்டரிலும் அவர் பேட்டிங் நன்றாக செய்ததாக தெரியவில்லை’ என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக கேதர் ஜாதவ் விளையாடினார். பல முக்கியமான போட்டிகளில், இவர் விளையாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருந்து கேதர் ஜாதவ் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில், ஹைதராபாத் அணி, கேதர் ஜாதவை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்