VIDEO: எப்படிங்க மனுசன் இவ்ளோ கரெக்ட்டா கணிக்கிறாரு..! ‘இல்லவே இல்லைன்னு தலையாட்டிய அம்பயர்’.. சிரிச்சிக்கிட்டே ‘மாஸ்’ காட்டிய தோனி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி ரிவீயூ கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது. போட்டியின் முதல் பாதியில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது.
இந்த இக்கட்டான சமயத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad), மும்பை அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். இதனால் 58 பந்துகளில் 88 ரன்கள் (9 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து அசத்தினார். அதேபோல் 8-வது வீரராக களமிறங்கிய பிராவோ (Bravo) 8 பந்துகளில் 23 ரன்கள் (3 சிக்சர்) அடித்து மிரட்டினார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியை பொறுத்தவரை பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி (Dhoni) மூன்றாம் அம்பயரிடம் கேட்ட ரிவியூ (Review) இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில், போட்டியின் 3-வது ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக்கின் காலில் பந்து பட்டு சென்றது. உடனே தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் அம்பயரிடம் அவுட் கேட்டனர்.
DRS king👑 Dhoni Review system🔥 #WhistlePodu @ChennaiIPL @msdhoni pic.twitter.com/TBWCbfeTWE
— Arman Sharief_07 (@arman_sharief) September 20, 2021
ஆனால் அது அவுட் இல்லை என அம்பயர் தலையசைத்தார். உடனே மூன்றாம் அம்பயரிடம் கேப்டன் தோனி ரிவியூ கேட்டார். அப்போது பந்து பேட்டில் படாமல் நேராக காலில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனை அடுத்து மூன்றாம் அம்பயர் அதனை அவுட் என அறிவித்தார். பேட்ஸ்மேனுக்கு பின்னால் இருந்தே விக்கெட்டை துல்லியமாக கணித்த தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்