‘இந்த வருசம் அதை பண்ண வேண்டாம்’!.. ‘இப்போ இருக்குறதே போதும்’.. ஸ்ட்ரிக்டா ‘நோ’ சொன்ன தோனி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணியில் இருந்து இந்த வருடம் வீரர்களை டிரான்ஸ்பர் செய்வது குறித்து கேப்டன் தோனி முக்கிய தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடருக்கான டிரான்ஸ்பர் விண்டோ தற்போது திறக்கப்பட்டுள்ளது, இதன்மூலம் மற்ற அணியில் விளையாடாமால் இருக்கும் வீரர்களை பாதி தொடருக்குபின் டிரான்ஸ்பர் செய்துகொள்ள முடியும். இதில் ஒரு அணியில் 3 போட்டிக்கு குறைவாக விளையாடியிருக்கும் வீரர்களை டிரான்ஸ்பர் செய்யப்படுகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் இந்த முறைப்படி ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு செல்கின்றனர்.
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் குறைவான வீரர்களே எடுக்கப்பட்டனர். மேலும் எந்த அணியிலும் அதிகமான மாற்றங்கள் செய்யப்படவில்லை. அதனால் இந்த வருடம் அதிக அளவில் வீரர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே கிரிக்கெட் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே விலகி வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய 3 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதனால் பல அணிகள் டிரான்ஸ்பர் விண்டோவை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை அணி இந்த வருடம் எந்த வீரர்களையும் டிரான்ஸ்பர் செய்யாது என சொல்லப்படுகிறது. முதலில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு வீரரை டிரான்ஸ்பர் செய்யும் முடிவில் இருந்ததாகவும், ஆனால் கேப்டன் தோனி வேண்டாம் என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. புதிதாக எந்த வீரரையும் எடுக்க வேண்டாம் என்றும், தற்போது உள்ள அணியே போதும் என்றும் தோனி கூறியதாக சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்