2020ல் 'டம்மி'யாக இருந்த சிஎஸ்கே... 2021ல் 'கில்லி'யாக மாறியது எப்படி?.. சிக்கலான விஷயம்... சிம்பிளாக முடித்த தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியை மீட்டு கொண்டு வர கேப்டன் தோனி தனது கேப்டன்சியில் செய்த மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் வியப்பூட்டும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

2020ல் 'டம்மி'யாக இருந்த சிஎஸ்கே... 2021ல் 'கில்லி'யாக மாறியது எப்படி?.. சிக்கலான விஷயம்... சிம்பிளாக முடித்த தோனி!

14வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் come back கொடுத்தது. மொத்தம் 7 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

3 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக சொதப்பியது. இதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான தோனி இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அணியின் பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்துக்கொண்டு செயல்பட்டார். குறிப்பாக சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக மொயின் அலியை முதல் விக்கெட்டிற்கு களமிறக்கியது வெகுவாக பாராட்டப்பட்டது. 

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் தோனியின் கேப்டன்சியில் நல்ல மாற்றம் தெரிந்தது. கடந்த வருடம் தோனி 5 பவுலர்களை மட்டுமே வைத்திருந்தார். அதிலும் அடிக்கடி மாற்றம் செய்தார். பேட்டிங்கில் ருத்ராஜ் கெயிக்வாட், நாராயண் ஜகதீசன் என இளம் வீரர்கள் அடிக்கடி உட்காரவைக்கப்பட்டனர். ஆனால், இந்த முறை அனைவரின் மீதும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பளித்தார். 

இந்த முறை சிஎஸ்கே அணியில் விளையாடிய 7 இந்திய வீரர்களில் ஒருவர் கூட உட்காரவைக்கப்படவில்லை. ருத்ராஜ் கெயிக்வாட், ஷர்துல் தாக்கூர் போன்றோர் தொடக்கத்தில் சொதப்பிய போதும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அயல்நாட்டு வீரர்களிலும் காயம் காரணமாக மட்டுமே மொயின் அலிக்கு பதிலாக டுவைன் பிராவோ கொண்டு வரப்பட்டார். மொத்தமாக 7 போட்டிகளையும் சேர்த்து 13 வீரர்களை மட்டுமே சிஎஸ்கே பயன்படுத்தியுள்ளது. 

சிஎஸ்கே தற்போது ஃபுல் ஃபார்மில் தயாராக உள்ளது. மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டாலும் இதே அணி விளையாண்டால் நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், அயல்நாட்டு வீரர்கள் உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதால் தொடரில் மீண்டும் பங்கேற்பார்களா என்பதில் குழப்பம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்