தோனி, ரோகித், கோலி, பும்ரா... ஜாம்பவான்கள் யாருமே இல்லாத... ஒரு 'சூப்பர் டூப்பர்' டீமை தயார் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!.. எப்படி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபத்தில் நடந்த ஐபிஎல் டி20 தொடருக்கான தனது ஆடும் லெவனை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

தோனி, ரோகித், கோலி, பும்ரா... ஜாம்பவான்கள் யாருமே இல்லாத... ஒரு 'சூப்பர் டூப்பர்' டீமை தயார் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!.. எப்படி?

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது.

மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர்கள் சிலர் இந்த தொடர் குறித்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் தங்களை கவர்ந்த வீரர்கள் குறித்தும், ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்களை ஓப்பனாக பேசி வரும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் 14வது சீசனுக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் ஜாம்பவான்களாக வலம் வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு தனது அணியில் இடம் கொடுக்காத ஆகாஷ் சோப்ரா, தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

அதே போல் மூன்றாவது இடத்தில் டூ பிளசிஸையும், நான்காவது இடத்தில் கிளன் மேக்ஸ்வெல்லையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா அடுத்ததாக டிவில்லியர்ஸ் மற்றும் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, கிரிஸ் மோர்ஸையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா பந்துவீச்சாளர்கள் வரிசையில் ராகுல் சாஹர், ஆவேஸ் கான் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்;

கே.எல் ராகுல், ஷிகர் தவான், டூபிளசிஸ், கிளன் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, கிரிஸ் மோரிஸ், ராகுல் சாஹர், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல்.

 

மற்ற செய்திகள்