களத்தில் மாறி,மாறி கத்திக்கொண்ட கேப்டன்கள்... அப்போ அந்த விஷயம் 'உண்மை' தானா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூர்-மும்பை அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று கடைசியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவிய பெங்களூர் அணி இந்த முறை கடைசிவரை போராடி வெற்றி பெற்றுள்ளது.

களத்தில் மாறி,மாறி கத்திக்கொண்ட கேப்டன்கள்... அப்போ அந்த விஷயம் 'உண்மை' தானா?

குறிப்பாக அந்த அணிக்கு படிக்கல், ஆரோன் பிஞ்ச், டிவில்லியர்ஸ் ஆகிய மூவரும் அரைசதம் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக திகழ்ந்தனர். இதுபோல பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி சூப்பர் ஓவரை அட்டகாசமாக வீசி அணிக்கு வெற்றி கிடைத்திட வழி செய்தார். இரண்டு அணிகளும் 200 ரன்களை தாண்டியதால் எந்த அணிஜெயிக்கும்? என்பது கடைசி வரை புதிராகவே இருந்தது.

IPL 2020: Washington Sundar picks Rohit Sharma's Wicket

நேற்றைய போட்டியில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். குறிப்பாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 11 பந்துகளை சந்தித்து 3 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவர் அடித்த பந்து சரியாக ரோஹித் கைகளில் சிக்க, அவரது விக்கெட்டை வீழ்த்தி சந்தோஷத்தில் ரோஹித் கத்தினார்.

IPL 2020: Washington Sundar picks Rohit Sharma's Wicket

தொடர்ந்து 2-வதாக மும்பை அணி பேட்டிங் செய்தபோது ரோஹித் 8 ரன்களில் அவுட் ஆனார். அவர் அடித்த பந்தை எல்லைக்கோட்டில் நின்ற நெகி பிடிக்க ரோஹித் பெவிலியன் திரும்பினார். இதைப்பார்த்த விராட் கத்திக்கொண்டே ஓடிவந்து ரோஹித்தின் விக்கெட்டை கொண்டாடினார். இப்படி மாறி,மாறி இருவரும் கத்தி கொண்டதை பார்த்த ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவருக்கும் இடையில் உரசல் இருப்பது உண்மை தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்