'சென்னை' முதல் டெல்லி வரை.. எந்த டீம்ல யாரை 'தூக்கி' இருக்காங்க?.. முழுவிவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு1. சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டீமில் இருந்து 5 வீரர்களை விடுவித்துள்ளது. வேறு அணிகளில் இருந்து எந்த வீரரையும் சென்னை அணி எடுக்கவில்லை.
1. சைதன்யா பிஸ்நோய் 2. துருவ் ஷோரி 3. சாம் பில்லிங்ஸ் 4. மோஹித் சர்மா 5. டேவிட் வில்லே
2.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஏலத்திற்கு முன்பாக சுமார் 10 வீரர்களை கொல்கத்தா அணி டீமில் இருந்து விடுவித்துள்ளது. அதே நேரம் கொல்கத்தா அணி மும்பை அணியில் இருந்து கிரிக்கெட் ஆல்ரவுண்டர் சித்தேஷ் லாடை வாங்கி இருக்கிறது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. ராபின் உத்தப்பா 2. பியூஸ் சாவ்லா 3. ஜோ டென்லி, 4. யாரா பிரித்விராஜ் 5. நிக்கி நாயக் 6. கே.சி.கரியப்பா 7. மேத்யூ கெல்லி 8. ஸ்ரீகாந்த் முந்தே 9. கரோலஸ் பிராத்வெயிட் 10. கிறிஸ் லின்.
3. கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தன்னுடைய அணியில் இருந்து 3 வீரர்களை விடுவித்துள்ளது. 2 வீரர்களை விற்பனை செய்துள்ளது. 2 வீரர்களை பிற அணிகளில் இருந்து வாங்கியுள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. டேவிட் மில்லர் 2. சாம் கரண் 3. ஆன்ட்ரூ டை 4. வருண் சக்கரவர்த்தி 5. மோய்சஸ் ஹென்றிகியூஸ் 6. அக்நிவேஷ் அயாச்சி 7. சிம்ரன் சிங்.
விற்பனை செய்யப்பட்ட வீரர்கள் விவரம்:
1. அஸ்வின்(7.6) கோடி - டெல்லி கேபிடல்ஸ் அணி
2. அங்கித் ராஜ்புத்( 3 கோடி) - ராஜஸ்தான் ராயல்ஸ்
வாங்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. கிருஷ்ணப்பா கவுதம் ( ராஜஸ்தான் ராயல்ஸ் - 6 கோடி)
2. ஜெகதீசா சுச்சித் ( டெல்லி கேபிடல்ஸ் - 20 லட்சம்)
4. மும்பை இந்தியன்ஸ்
நடப்பு சாம்பியன் அணி தன்னுடைய அணியில் இருந்து ஏகப்பட்ட வீரர்களை விடுவித்துள்ளது. அதே நேரம் பிற அணிகளில் இருந்து வீரர்களை விலைக்கும் வாங்கியுள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1.ஈவின் லீவிஸ் 2. ஆடம் மில்னே 3. ஜேசன் பெரென்டிராப் 4. பூரான் ஹென்றிக்ஸ் 5. பென் கட்டிங் 6. யுவராஜ் சிங் 7.பரிந்தர் ஸ்ரன் 8.ரஷிக் சலாம் 9.பங்கஜ் ஐஸ்வால் 10.அல்சாரி ஜோசப்.
விற்பனை செய்யப்பட்ட வீரர்கள் விவரம்:
1. மயங்க் மார்கண்டே ( டெல்லி கேபிடல்ஸ் - 20 லட்சம்)
2. சித்தேஷ் லாட் ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
வாங்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. ஷெர்பேன் ரூதர்போர்டு ( டெல்லி கேபிடல்ஸ் - 6.2 கோடி)
2. ட்ரெண்ட் போல்ட் ( டெல்லி கேபிடல்ஸ் - 2.2 கோடி)
3. தவல் குல்கர்னி (ராஜஸ்தான் ராயல்ஸ் - 75 லட்சம்)
5. ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் அணி ஏகப்பட்ட வீரர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளது. அதே நேரம் பிற அணிகளில் இருந்து வீரர்களை விலைக்கு வாங்கியும், பிற அணிகளுக்கு வீரர்களை விற்பனை செய்தும் இருக்கிறது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. ஆஸ்டன் டர்னர் 2 ஒசேன் தாமஸ் 3. சுபம் ரஞ்சேன் 4. பிரசாந்த் சோப்ரா 5. ஐஸ் சோதி 6. ஆர்யமான் பிர்லா 7. ஜெயதேவ் உனத்கட் 8. ராகுல் திரிபாதி 9. ஸ்டூவர்ட் பின்னி 10. லியாம் லிவிங்ஸ்டோன் 11. சுதேஷான் மிதுன்.
வாங்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. ராகுல் தெவேதியா ( டெல்லி கேபிடல்ஸ் - 3 கோடி)
2. அங்கித் ராஜ்புத் ( கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 3 கோடி)
விற்பனை செய்யப்பட்ட வீரர்கள் விவரம்:
1. கிருஷ்ணப்பா கவுதம் ( கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 6.2 கோடி)
2. தவல் குல்கர்னி (மும்பை இந்தியன்ஸ் - 75 லட்சம்)
3. அஜிங்கியா ரஹானே ( டெல்லி கேபிடல்ஸ் - 4 கோடி)
6. டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி அணி இந்த முறை ஏகப்பட்ட வீரர்களை பிற அணிகளில் இருந்து விலைக்கு வாங்கி அணியை வலுப்படுத்தி உள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. ஹனுமான் விஹாரி 2. ஜலாஜ் சக்சேனா 3. மஞ்சோத் கல்ரா 4. அங்குஷ் பைன்ஸ் 5.நது சிங் 6. பண்டாரு ஐயப்பா.7. கிறிஸ் மோரிஸ் 8. காலின் முன்ரோ 9. காலின் இங்ரம்.
வாங்கிய வீரர்கள் விவரம்:
1. அஸ்வின் ரவிச்சந்திரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 6.2 கோடி)
2. அஜிங்கியா ரஹானே ( ராஜஸ்தான் ராயல்ஸ் - 4 கோடி)
3. மயங்க் மார்கண்டே ( மும்பை இந்தியன்ஸ் - 20 லட்சம்)
விற்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. ட்ரெண்ட் போல்ட் ( மும்பை இந்தியன்ஸ் - 2.2 கோடி)
2. ராகுல் தெவேதியா ( ராஜஸ்தான் ராயல்ஸ் - 3 கோடி)
3. ஜெகதீசா சுச்சித் ( கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 20 லட்சம்)
7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மிகவும் வலுவான அணியாக திகழும் சன்ரைசர்ஸ் அணி 5 முக்கிய வீரர்களை அணியில் இருந்து கழட்டி விட்டுள்ளது. குறிப்பாக சூதாட்ட புகாருக்கு ஆளான வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனை அந்த அணி கழட்டி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. ஷாகிப் அல் ஹசன் 2. யூசுப் பதான் 3. மார்ட்டின் குப்தில் 4. தீபக் ஹூடா 5. ரிக்கி பாய்.
8. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வழிநடத்தும் பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை. அதனால் இந்தமுறை கண்டிப்பாக கோப்பை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த அணி முக்கிய வீரர்கள் பலரையும் கழட்டி விட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
1. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2. ஷிம்ரான் ஹெட்மேயர் 3. அக்ஸ்தீப் நாத் 4. நாதன் கோல்டர் நைல் 5. டி கிராண்ட்ஹோம் 6. பிராயஸ் ரே பர்மான் 7. டிம் சவுத்தி 8. குல்வந்த் கெஜ்ரோலியா 9. ஹிம்மட் சிங் 10. ஹென்ரிச் கிளாஸன் 11. மிலிந்த் குமார்.
சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய 3 அணிகளும் எந்தவொரு வீரரையும் பிற அணிகளில் இருந்து வாங்கவோ, விற்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.