"என்னத்த விளையாடறாரு...? ஏன், எல்லா டீமும்... அவரு பின்னாடி இப்படி ஓடறாங்கன்னு... புரியவே இல்ல??!"... - 'பிரபல வீரரை விளாசித் தள்ளிய சேவாக்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ் வெல்லை வீரேந்திர சேவாக் கடுமையாக விளாசியுள்ளார்.

"என்னத்த விளையாடறாரு...? ஏன், எல்லா டீமும்... அவரு பின்னாடி இப்படி ஓடறாங்கன்னு... புரியவே இல்ல??!"... - 'பிரபல வீரரை விளாசித் தள்ளிய சேவாக்!!!'...

ஐபிஎல்லில் பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பிவரும் போதிலும் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேனான க்ளென் மேக்ஸ்வெல் ஒவ்வொரு சீசனிலுமே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய மேக்ஸ்வெல் 2018ல் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ 9 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த அணிக்காக விளையாடியபோதும் அவர் தொடர்ந்து சொதப்ப, நடப்பு சீசனில் அவரை பஞ்சாப் அணி ரூ 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

IPL 2020 Sehwag Slams KXIPs Glenn Maxwells Poor Performances

ஆனால் இந்த சீசனிலும் வழக்கம்போலவே மேக்ஸ்வெல் சொதப்பியே வருகிறார். எந்த பேட்டிங் ஆர்டரில் இறக்கிவிட்டாலும் சரியாக விளையாடுவதில்லை. பஞ்சாப் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று வெற்றி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை பஞ்சாப் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே விளையாடிய மேக்ஸ்வெல் 48 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஐபிஎல்லுக்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழலில் இருந்த ஆஸ்திரேலிய அணியை சதமடித்து வெற்றி பெற வைத்த மேக்ஸ்வெல் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே படுமோசமாக சொதப்பி வருகிறார்.

IPL 2020 Sehwag Slams KXIPs Glenn Maxwells Poor Performances

இந்நிலையில் இதுகுறித்து கிரிக்பஸ் இணையதளத்திடம் பேசிய சேவாக், "மேக்ஸ்வெல் எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கினாலும் சரியாக ஆடுவதில்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் 2 விக்கெட்டுகள் விரைவில் விழுந்ததால் சீக்கிரமாகவே களத்திற்கு வந்தார். ஆனால் சரியாக ஆடவில்லை. அதற்கு முந்தைய போட்டிகளில் டெத் ஓவர்களில் களமிறங்கியும் சரியாக ஆடவில்லை. டெத் ஓவர்களில் சரியாக விளையாடவில்லை என்றால், சீக்கிரமாக களமிறங்கினாலுமே சொதப்ப தான் செய்கிறார். அவருடைய மனநிலையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதையே தான் செய்து கொண்டிருக்கிறார். ஐபிஎல்லில் அதிகமான விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுகிறார். ஆனால் ஒரு சீசனில் கூட சரியாக விளையாடுவதில்லை. ஆனாலும் ஐபிஎல் அணிகள் அவருக்கு பின்னாலேயே ஏன் ஓடுகின்றன என எனக்கு புரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்