ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்களின் 'சம்பள' விவரம்...கிங் கோலிக்கு... அடுத்த 'எடம்' இவருக்கு தான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி புதிதாக 8 வீரர்களை அணியில் எடுத்தது. தற்போது பெங்களூர் அணியில் உள்ள மொத்த வீரர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. இதில் உள்நாட்டு வீரர்கள் 13 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 8 பேரும் இடம்பெற்று உள்ளனர். பெங்களூர் அணி கைவசம் தற்போது 6.4  கோடி மீதமுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்களின் 'சம்பள' விவரம்...கிங் கோலிக்கு... அடுத்த 'எடம்' இவருக்கு தான்!

12 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்பதால், இந்தமுறை கட்டாயம் கோப்பை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூர் அணி களமிறங்கி உள்ளது. இதற்காக வெளிநாட்டு வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அந்த அணி எடுத்துள்ளது. இந்தநிலையில் அந்த அணி வீரர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதுகுறித்த விவரங்களை கீழே பார்க்கலாம்.

பெங்களூர் அணி வீரர்களின் சம்பள விவரம்:-

1. விராட் கோலி - 17 கோடி

2. ஏபி டிவில்லியர்ஸ் - 11 கோடி

3. கிரிஸ் மோரிஸ் - 10 கோடி

4. யஷ்வேந்திர சாஹல் - 6 கோடி

5. சிவம் துபே - 5 கோடி

6. ஆரோன் பிஞ்ச் - 4.4 கோடி

7. உமேஷ் யாதவ் - 4.2 கோடி

8. கனே ரிச்சர்ட்சன் - 4 கோடி

9. வாஷிங்டன் சுந்தர் - 3.20 கோடி

10. நவ்தீப் சைனி - 3 கோடி

11. மொஹம்மது சிராஜ் - 2.6 கோடி

12. டேல் ஸ்டெயின் - 2 கோடி

13. மொயீன் அலி - 1.7 கோடி

14. பார்த்தீவ் படேல் - 1.7 கோடி

15. பவன் நேகி - 1 கோடி

16. குர்கீரத் மான் சிங் - 50 லட்சம்

17. இசுரு உடானா - 50 லட்சம்

18. தேவ்தத் படிக்கல் - 20 லட்சம்

19. ஜோஸுவா பிலிப்பி - 20 லட்சம்

20. பவன் தேஷ்பாண்டே - 20 லட்சம்

21. சபாஸ் அஹம்மது - 20 லட்சம்