Video: இது ரெண்டாவது சம்பவம்... ஆனா யாருமே 'கண்டுக்க' மாட்றாங்க... கொந்தளிக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி எழுச்சி பெற்று, ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்தும் கட்டுக்கோப்பாக இருந்ததால் இந்த வெற்றி எளிதில் சாத்தியமானது. இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த சீசனில் எந்தவொரு அணியையும் எளிதாக குறைத்து மதிப்பிட முடியாது என புகழ்ந்து வருகின்றனர்.
அதே நேரம் அம்பயர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா காரணமாக பந்தை எச்சில் தொட்டு தேய்ப்பது தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் வீரர்கள் அதை பின்பற்றுவது போல தெரியவில்லை. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அமித் மிஸ்ரா பந்தை எச்சில் தொட்டு தேய்த்தார். ஆனால் அதை அம்பயர் கண்டுகொண்டது போல தெரியவில்லை.
இதேபோல நேற்று நடைபெற்ற போட்டியில் ராபின் உத்தப்பா பந்தை எச்சில் தொட்டு தேய்க்க, அம்பயர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் விதிமுறைகள் மீறப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொல்கத்தா அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு வந்திருக்கும் உத்தப்பா நேற்று ஒரு எளிதான கேட்சை மிஸ் செய்தது மட்டுமின்றி, சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் அவர் பார்ம் அவுட் ஆகி விட்டாரா? என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
#Uthappa inpired by 👀🤣#RRvKKR pic.twitter.com/HaRyfSfiqD
— Likhitha गुप्ता సుగ్గల 🇮🇳💃🏽 (@likhithaSuggala) September 30, 2020
— Cow Corner (@CowCorner9) September 30, 2020
மற்ற செய்திகள்